பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

அதுவும் மனமும் பழக்கப்பட்டதை நினைக்கும் சக்தியும் இல்லாமல் செய்ய முடியுமா?

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா நின்னடி
என்மனத்தே
வழுவா திருக்க வரம்தர வேண்டும்”

என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். புழுவானாலும் அதற்கும் மனம் உண்டு என்ற கருத்தை அது தெரிவிக்கிறது.

ஆகவே, எல்லாப் பிராணிகளுக்கும் மனம் உண்டென்பது தெளிவாகிறது. ஆனால் எல்லாப் பிராணிகளுடைய மனமும் ஒரே மாதிரி இருப்பதில்லை, மனவளர்ச்சியின் போக்குக்கு ஏற்ப, விலங்கினங்கள் சிறப்பை அடைகின்றன. மன வளர்ச்சியை முழுமையாகப் பெற்றவன் மனிதன். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்றவை ஒன்றாக இணைந்த அந்தக்கரணத்தை அவன் படைத்திருக்கிறான். விஞ்ஞான ஆராய்ச்சியாளரும் பரிணாம முறையில் மனிதன் மூளைச் சக்தியை அதிகமாகப் பெற்றிருக்கிறான் என்று சொல்கின்றனர். சில சமயங்களில் தேவர்கனையும் விட மனிதன் வல்லவனாக இருக்கிறான். பழைய புராண இதிகாசங்களில் தசரதன் முதலியோர் தேவர்களுக்கு உதவி செய்ததாகப் படிக்கிறோம். அதிலிருந்து இது புலனாகிறது.

பக்தி செய்யும் தூறத்தில் மனிதனே சிறந்தவன். தேவர்கள். தம்முடைய நலத்தை எண்ணியே இறைவனிடம் அன்பு செய்கிறார்கள்.

"வாழ்த்துவதும் வானவர்கள்
தாம் வாழ்வான்: மனம்நின் பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து
தம்மைஎல்லாம் தொழவேண்டி"

என்று மணிவாசகர் பாடுகிறார். ஆகவே, எதையும் எதிர்பாராமல் இறைவனிடம் பக்தி வைக்கிறவர்கள் மனிதர்களில்