பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211



—இகழாதே

யார்என்பே யேனும்
அணிந்துஉழல்வோர்க்கு ஆட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு.

ஓரளவு முயற்சி செய்து பயன் பெற்ற ஒருவனைப்பார்த்து, "இந்தப் பயன் பெற்றிருக்கிறாயே! இது எதனால் விளைந்தது? உன் முயற்சியால் இன்னும் முயல்; இடைவிடாது முயற்சி செய். பெரும் பயன் பெறலாம்” என்று முன்னே அநுபவத்தை சுட்டிக்காட்டி ஊக்குவதைப் போல அம்மையார் தம் நெஞ்சைப் பார்த்துச் சொல்கிறார்,

உடம்பைக் காப்பாற்ற உணவும் மருந்தும் வேண்டும். உள்ளத்தைக் காப்பாற்றக் கல்வியும் அறிவும் வேண்டும் உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் அன்பு வேண்டும். உணவை உண்டு உடம்பு வலிமை பெறுவது போல, அறிவு பெற்று உள்ளம் தெளிவை அடைவது போல, அன்பைக் கொண்டு உயிர் வளர்ந்து இன்பத்தை அடையும்; மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து வரும் தீங்கை அடையாமல் காக்கப் பெறும்.

"அன்பைப் பெருக்கிஎன்
ஆருயிரைக் காக்கவந்த
இன்பப் பெருக்கே!
இறையே! பராபரமே"

என்று தாயுமானவர் பாடுகிறார். அன்பு பெருக்கினால் ஆருயிர் காப்பைப் பெற்று இன்னல் அகன்று இன்பத்தை அடையும்.

எனவே, அம்மையார் தம் நெஞ்சை நோக்கி அன்பைப் பெருக்கு என்று கூறுகிறார். இதுவரைக்கும் அன்பைப் பெருக்கியதனால் பெற்ற பயன் பெரிதுதான்.ஆனல் அது போதாது.இன்னும் அன்பைப் பெருக்கு. முடிந்த முடிவாகிய இன்ப நிலையை அடையலாம் என்று சொல்கிறார்.