பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

சிவபெருமான் என்றும் அழியாதவன்; முதுமை அடையாதவன். அவனுக்கு முக்கியமான அடையாளம் அவன் திருநுதலில் இருக்கும் ஞானக்கண். “இமையாத முக்கண் மூவரிற் பெற்றவன்” என்று மாணிக்கவாகசர் சிறப்பிப்பார். “நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையான் கண்டாய்” என்று அப்பர் பாராட்டுவார். “நெற்றியிலே கண்படைத்தவனோ?” என்று உலக வழக்கில் கேட்கும் கேள்வி, சிவபெருமான் யாராலும் செய்ய முடியாததைச் செய்யும் பேராற்றல் உடையவன் என்பதைக் காட்டும். சிவபெருமானுடைய சிறப்பாள அடையாளம் அது.

இவற்றையெல்லாம் நினைந்து பார்க்கிறார் காரைக்கால் அம்மையார்.

முதற்கண்ணான் முப்புரங்கள்
அன்றுஎரித்தான்; மூவா
நுதற்கண்ணான்.

‘அத்தகைய பெருமானுடைய மார்பிலே விளங்கும் நூல், அவன் தலையிலுள்ள பிறையின் ஒரு கதிர் கீழே வந்து ஒழுகியது போல் இருக்கிறது’ என்கிறார் அம்மையார்.

பெருகுஒளிய செஞ்சடைமேல் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்துஒழுகிற்று ஒக்கும்—தெரியின்
முதற்கண்ணான், முப்புரங்கள் அன்றுஎரித்தான், மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.

‘எல்லாப் பொருளுக்கும் முதலிலே உள்ளவனும், எவ்வுயிர்க்கும் கண்ணைப் போன்றவனும், மூன்று புரங்களையும் பழங்காலத்தில் எரித்தவனும், அழியாதவனும், நெற்றியிலே கண்ணை உடையவனுமாகிய சிவபெருமானுடைய திருமார்பில் உள்ள முப்புரி நூலானது, ஆராய்ந்து பார்த்தால், பெருகும்