பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217

ஒளியை உடைய செம்மையான சடையின்மேல் உள்ள இளம் பிறையின் ஒரு கதிர் கீழே வந்து ஒழுகியதை ஒக்கும்’ என்பது இதன் பொருள்.

[பெருகு ஒளிய என்ற அடையைப் பிறைக்கு ஏற்றியும் சொல்லலாம். ஒழுகிற்று-ஒழுகியது. தெரியின்-ஆராய்ந்து பார்த்தால். மூவா-அழியாத, மூப்பை அடையாத. அன்று: பண்டறிசுட்டு. தன் சாரியை. நூல் ஒக்கும் என்க.]

இது அற்புதத் திருவந்தாதியில் 32-ஆவது பாட்டு.