பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



219

அளக்கர்" என்று கம்பரும் பாடியிருக்கிறார்கள். அப்படி விரிந்திருக்கும் கடலைக் கடந்தால் உடனே பெற வேண்டிய பேறு வந்துவிடாது. அதற்கு மேல் மற்ருெரு விரிந்த கடல் இருக்கிறது. அதுதான் வாலறிவு. கல்வி கற்கும் போது படிப்படியாக ஏற வேண்டியிருக்கிறது. அப்படியே இறைவன் அருளைப் பெறும் வாலறிவிலும் எத்தனையோ படிகள் இருக்கின்றன. கல்வியை முற்றக் கற்றுவிட்டோம் என்று சொல்கிறவன் அதனால் திருப்தி அடைய முடியாது. உண்மையாக அவன் கல்வி கற்று நிரம்பினால் உடனே வாலறிவுப் பிரதேசத்தில் அடிவைக்க வேண்டும். கல்வியின் கடை வாயிலுக்கு அடுத்தபடி இருப்பது ஞானவாயில். கல்வியின் கடை வாயிலுக்கு வந்துவிட்டோம் என்று மேலே உள்ள ஞானவாயிலைக் காணாமல், அதனுள்ளே நுழைய முயலாமல் இருந்தால் கல்விப் பிரதேசத்தில் இத்தனை தூரம் கடந்து வந்தது அவ்வளவும் வீணகிவிடும்; பயனின்றி ஒழியும். கற்று நூலறிவை முற்றப் பெற்றதற்குப் பயன் வாலறிவுப் பிரதேசத்தில் நுழைவாயிலாகிய கடவுட் பக்தி உண்டாக வேண்டும்; வாலறிவன் நற்றாளை வணங்க வேண்டும்.

எஸ். எஸ். எல். ஸி. பரீட்சைக்குப் போகிறான் ஒருவன். பதினேராண்டுகள் படித்துப் பள்ளி இறுதித் தேர்வை எழுதுகிறான்: தேர்ச்சி பெறுகிறான். அவ்வாறு தேர்ச்சி பெறுகிறவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிக்குச் செல்லும் தகுதி பெறுகிறவர்கள் ஒரு சாரார், ஓரிரண்டு பகுதிகளில் தேர்ச்சி பெறாமல், மறுபடியும் அவற்றை மட்டும் எழுதி நிறைவேற்றுகிறவர்கள் ஒரு சாரார். ஆனால் அப்படித் துண்டு துண்டாக எழுதினவர்கள் கல்லூரியில் நுழைய முடியாது. கல்லூரியில் நுழையும் தகுதியுடையவர்களே சிறந்தவர்கள்.

பள்ளியிறுதிப் படிப்போடு நின்றுவிடுகிறவர் போன்றவர்கள் நூலறிவோடு நிற்பவர்கள். கல்லூரியில் நுழைகிறவர்களைப் போன்றவர் வாலறிவன் நற்றாளைத் தொழுகிற