பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

வர்கள். பயன் இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்தல் வீண்; கற்றதற்குப் பயன் வாலறிவன் நற்றாள் தொழல்; அவ்வாறு தொழாவிட்டால் கற்றது அவ்வளவும் வீண்.

இந்தக் கருத்தையே முன் சொன்ன குறளால் நாம் அறிகிறோம். வாலறிவன்தான் பிறவிப் பிணிக்கு மருந்தாதலால் அவனைத் தொழுபவன் முடிந்த பயனாக வீட்டைப் பெறுவான். இதை வேறு ஒரு பாட்டுச் சொல்கிறது.

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்;
—மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முழுநூற் பொருள் அறிந்து
கட்டறுத்து வீடு பெறும்.”

வெறும் நூலறிவைக் கொண்டவர் பேச்சில் வல்லவர்களாக இருக்கலாம்; ஆனால் மேலே செய்ய வேண்டியதைச் செய்யாமல், வாலறிவன் தாளைத் தொழாமல், இருந்தால் அவர்களுக்கு அமைதியே இராது. ஒரு பிறவி போனால் மறு பிறவி பெற்றுத் திரிந்துகொண்டே இருப்பர். இந்தப் பிறவியிலும் மெத்தப் படித்ததனால் ஐயங்கள் உண்டாகி, அநுபவம் இன்மையால் தெளிவு உண்டாகாமல் திரிந்துகொண்டே இருப்பர்.

"வாலறிவுலகத்தையே எட்டிப் பாராமல், இறைவனைப் பற்றி எண்ணாமல், நூலறிவைப் பேசிப் பேசி வாழ்கிறவர்கள், போக வேண்டிய பிரதேசத்தில் நுழையாதவர்கள், திரிந்து கொண்டே இருக்கட்டும்!' என்று காரைக்கால் அம்மையார் சொல்கிறார்,

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக!

நூலறிவுக்கு மேலே போக வேண்டுமானால் நுட்பம் வேண்டும். நுட்பத்தை நுழைபுலம் என்பார்கள். 'நுண்மாண்