பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34. அணையாதார் பெறும் துன்பம்


 சிவபெருமான் திரிபுரசங்காரம் செய்தான். வெள்ளி, பொன், இரும்பு என்ற மூன்று உலோகங்களாலும் பறக்கும் கோட்டைகளை அமைத்துக்கொண்டு வித்யுன்மாலி, தாரகாட்சன், வாணன் என்ற மூன்று அசுரர்கள் எங்கும் பறந்து வந்தார்கள். திடீரென்று ஒரிடத்தில் இறங்குவார்கள். அந்தக் கோட்டைகள் பூமியில் படியும்போது அங்கிருந்த அத்தனை பேர்களும் நசுங்கி அழிந்து போவார்கள். இப்படியே அவர்கள் செய்து வந்தார்கள். இதனால் அவர்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஆனாலும் அப்படி மக்கள் அழிவதைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஆனந்தம். பிறர் துன்பப்படுவதைக் கண்டு பொறுக்காமல் அந்தத் துன்பத்தை நீக்க முற்படுகிறவர்கள் தேவசாதியைச் சேர்ந்த உத்தமர்கள். அந்தத் துன்பத்தைக் கண்டு வருந்தி 'நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே!” என்று இரங்குபவர்கள், நல்ல மனிதர்கள். பிறர் துன்பத்தைக் கண்டு மனத்தில் எந்த வேறுபாடும் இல்லாமல் இருக்கிறவர்கள் விலங்குச் சாதியினர். பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்பவர்கள் அசுர சாதியினர்.

இந்த மூன்று கோட்டைகளையும் திரிபுரங்கள் என்று சொல்லுவார்கள்; அதைத் தமிழ் வடிவமாகக்கொண்டால் இரண்டு வகையில் பொருள் கொள்ளலாம். மூன்று நகரங்கள் என்பது ஒரு பொருள்; வானத்தில் பறந்து திரியும் நகரங்கள் என்பது மற்ருெரு பொருள். முப்புரம் என்று தமிழில் சொல்வார்கள்.

திரிபுரத்துக்கு உரியவர்களால் உண்டாகும் துன்பத்தைத் தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் முறை