பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

படியாக ஓர் அம்பினால் அழித்தவனை மனத்தினாலே தியானித்து, அவனை நெருங்கிப் பக்தி செய்யாதவர்களை அந்த வினைகள் துன்புறுத்தும்.

வினைகளுக்கு நல்லது செய்யத் தெரியாது; துன்பத்தையே செய்யும் என்றார்.

ஆமாறு—வளர்ச்சி பெறும் வழி; ஆக்கத்தைப் பெறும் நெறி. அந்தரம்-வானம், வேமாறு-வேகும்படி. நகர் மூன்றும் செற்றானை வல்வினைகள் ஆமாறு அறியா, அடும் என்று கூட்டிப் பொருள் கொள்க.]

இறைவனை வழிபட்டு அன்பு செய்யாதவர்கள் வல்வினையால் துன்புறுவார்கள் என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் 34-ஆவது பாட்டு இது.