பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

நன்மையைச் சொல்வார். அதற்கு உவமை கூறிச் சிறப்பிப்பார். இப்போது சொல்லப்போகும் பாட்டில் நீலகண்டத்தை நினைந்து ஒரு கற்பனை செய்கிறார்.

அவனுடைய நீலமணி போன்ற திருக்கழுத்து விடத்தை உள்ளடக்கியிருக்கிறது. அந்த மறுவே நீலமணி போல் தோற்றுகிறது. இருள் செறிந்தது போலச் சில சமயங்களில் நல்ல கறுப்பாகத் தோன்றும். "கறைமிடறு அணியலும் அணிந்தன்று" (புறநானூறு) என்று அதைக் கறுப்பான கறை என்று புலவர்கள் கூறுவார்கள்.

ஒருகால் இருள் செறிந்து வந்து அங்கே கட்டிதட்டி நிற்கிறதோ? ஏன் அங்கே வந்து இருக்கவேண்டும்? இறைவன் திருமேனி ஒளியையுடையது. அவன் தலையில் இருக்கும் மதி ஒளியை வீசுகிறது. சந்திரனுடைய நிலாவினால் இருள் நீங்கும்.

இறைவன் அரவையே அணிகலனாகப் பூண்டிருக்கிறான். படம் எடுக்கும் நாகப்பாம்புகள் அவை. அவற்றின் கழுத்து அழகாக இருக்கும். வாயோ ஆழமான வாய். அத்தகைய அரவை அவன் முடியின்மேல் கட்டியிருக்கிறான். அரவுகளை அணிந்ததோடு கூட நீலமணியையும் அணிந்திருக்கிறானே?" கழுத்தில் நஞ்சு அப்படித்தோன்றுகிறது. ஆனால் ஒளி வீசும் சந்திரனைக் கண்டால் வேறு ஒரு கற்பனை தோன்றுகிறது.

அவனுடைய திருமேனி சுடர் வீசுகிறது. திருக்கழுத்தும் சுடர் விசும் கோல்ம் உடையது. ஆனால் அங்கேதான் இருட்டைப் போல இந்தக் கறுப்பு இருக்கிறது.

அம்மையார் இறைவன் தலைமேல் உள்ள வெண்மதியைப் பார்க்கிறார். இறைவனுடைய திருமுடியாகிய உயர்ந்த இடத்தில் இருப்பதால் அதற்கு அச்சமே இல்லை. நன்றாக ஒளி விடுகிறது. இப்போதே இது இப்படி இருக்கிறதே! இது வளர்ந்துவிட்டால் இன்னும் எவ்வளவு ஒளிவிடும்? என்று