பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

களில் பாம்பு விழுங்கி உமிழும் இன்னலுக்கு உட்படுவது திங்கள். என்றோ ஒருநாள் அந்த விபத்து நிகழ்ந்தாலும், அதை நினைத்து நாகப்பாம்பு என்றாலே அச்சம் கொள்ளும் இயல்புடையது அந்தத் திங்கள். "அரண்டவனுக்கு இருண்ட தெல்லாம் பேய்" தானே?

'இந்தச் சந்திரன் உம்முடைய நீண்ட சடைமேல் உள்ள நாகத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. எந்தச் சமயத்தில் அது தன்னை விழுங்கி விடுமோ என்று மறுகுகிறது. அதனால் அது தேய்ந்திருக்கிறது. ஐயோ பாவம்!"

வார்சடைமேல் நாகம்

தெறும் என்று தேய்ந்து உழலும்; ஆவா!

'அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் நோஞ்சானாகத் தேய்ந்திருக்கிறது இந்த மதி. பாம்பையும் திங்களையும் ஒருங்கே அணிந்ததால் வந்தவினை இது. அந்த நாகம் என்ன செய்து விடுமோ என்று அஞ்சி அஞ்சிச் சாகும்படி வைத்திருக்கிறீரே நியாயமா? அந்தப் பாம்பு ஏதோ இதுவரையில் சும்மா இருக்கிறது. வானத்தில் உள்ள சந்திரனைப் போல வளரக்கூடாதோ என்று நினைத்துப் பார்க்கிறேன். அது எப்படி வளரும்? அந்தப் பாம்பு வானம் அஞ்சும்படி மேலே தாவி ஓடினால் சந்திரனை எட்டிப் பிடித்துவிடுமே! நீ உச்சியில் அணிந்த பிறை இப்போது நாகத்தோடு தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால் அந்தப் பாம்பு எட்டித் தாவ ஆரம்பித்தால் என்ன செய்வது? அப்படி அது தாவுமோ என்று பயந்தபடியே இருக்கிறது அந்த மதி. அது எப்படி வளரும்?. நாகப்பாம்பு முழுமதியை விழுங்கிவிடும். மதி வளர்ந்து பூர்ண சந்திரன் ஆகிவிட்டால் அந்தப் பாம்பு ஒரே தாவாகத் தாவி அதை விழுங்கினாலும் விழுங்கும். அது அப்படி முடியின்மேலே தாவும்போது வானில் உள்ளவர்களே அஞ்சுவார்களே! திங்கள் அஞ்சாமல் இருக்குமா? அந்த அச்சத்தால்தான் அது வளராமல் இருக்கிறது. தான் வளர்ந்து முழுமதியாகி விட்