பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



241

டால் நாகப்பாம்புக்கு இரையாக நேரும் என்ற அச்சம் காரணமாகவே அது வளராமல் இருக்கிறது. நாகத்தை அருகிலே வைத்திருக்கும்போது, சந்திரன் வளருமா?

—உறுவான்
தரைமீது ஓடுமேல், தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி?

அது பிள்ளைமதியாக, பிறையாகவே தேய்ந்திருப்பதற்குக் காரணம் இதுதான் என்று காரைக்கால் அம்மையார், கற்பனையாக ஒன்றைச் சொல்கிறார்.

மறுவுடைய கண்டத்தீர்,
    வார்சடைமேல் நாகம்
தெறும்என்று தேய்ந்துஉழலும்
    ஆவா! — உறுவான்
தளரமீது ஒடுமேல்
     தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி?

[ஆலகால நஞ்சமாகிய மறுவை அளித்த திருக்கழுத்தை உடைய உடைய பெருமானே, இளமையையுடைய பிறை, உம்முடைய நீண்ட சடையின்மேல் அணிந்துள்ள நாகப் பாம்பு தன்னை வருத்தும் என்று அஞ்சித் தேய்ந்து மனம் மறுகும். ஐயோ பாவம்! (தான் வளர்ந்து முழுத்திங்களாகி விடும்போது) மேலே உள்ள வானத்திலுள்ளோர் தளரும்படியாக அந்தப் பாம்பு மேலே தன்னைக் கவ்வ ஓடுமானால், அந்த மதி அஞ்சி நையுமேயன்றி வளருமா?

மறு—கறுப்பு, தெறும்—துன்புறுத்தும். உழலும்—மனம் சுழலும்; கலங்கும். ஆவா: இரக்கக் குறிப்பு, வான்—வானில் உள்ளார். ஓடுமேல் என்றது வளர்ந்தபோது அதைக் கவ்வ

நா.—16