பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

தியானம் செய்யலானார். அந்தச் சேவடியையே உள்ளத்தால் சேர்ந்திருக்கும் திறமை அவரிடம் மலர்ந்தது.

'தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது’

என்ற குறளில் பரிமேலழகர், சேர்தலாவது இடைவிடாது நினைத்தல்' என்று எழுதினார், அம்மையார் 'காதல் சிறந்து இறைவன் சேவடியே சேர்ந்து' நின்றார், மொழி, மனம், உடம்பு ஆகிய முக்கரணங்களும் இறைவனிடம் ஈடுபட்டு நின்றன. பிறந்து மொழி பயின்ற இளம் பருவந்தொட்டே இறைவனைத் தியானித்து வாழ்த்தி வந்தார். -

இறைவன் இன்னும் தமக்கு முழுக்கருணையும் வழங்கவில்லை என்ற குறை அவருக்கு இருந்தது. இன்னும் சில இடர்ப்பாடுகள் தமக்கு இருப்பதாக உணர்ந்தார். பொருளுடையவருக்கு எப்படித் தம்மிடம் உள்ள பொருள் போதாது, இன்னும் வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ, அதுபோலவே, இறைவன் அருளேப் பெற்றவர்களுக்கும் தமக்குக் கிடைத்த அருள் போதாது என்ற உணர்வு உண்டாகும். அத்தகைய மனநிலையில், தமக்குள்ள இடர்களே இன்னும் இறைவன் முற்றும் போக்கியருளவில்லையே என்ற குறை தோன்றியது.

நீலகண்டத்தைக் கண்டு அதன் தொடர்பாகச் சிவபெருமான் வானோர் இடரைத் தீர்த்த அருட்செயல் நினைவுக்கு வந்தது அம்மையாருக்கு. தம் இடரை இறைவன் தீர்க்கவில்லேயே என்ற எண்ணம் அடுத்துத் தோன்றியது. மீட்டும் வானவர் நிலையையும் தம் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கலானார்.

வானவர்கள் முதலில் இறைவனை நினைக்கவில்லை; புறக்கணித்தார்கள். ஆபத்து வந்தபோது திடீரென்று அவனிடம் ஒடிச் சரண் புகுந்தார்கள். இறைவன் உடனே அவருக்கு அருள் செய்தான். அம்மையாரோ பல காலமாக இறைவனிடம் ஈடுபட்டவர். பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம்