பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244


பொதுவாக விஞ்ஞானத்தில் மேல் நிலைக்குப் போகப்போகக் குறியீடுகளே அதிகமாக இருக்கும். அவற்றின் நுட்பத்தை அறியாதவர்கள் அவற்றைக் கண்டு, எள்ளி நகையாடவும் கூடும். அறியாமையுடையவர்கள் மதித்தாலும் அவமதித்தாலும் அதைப் பற்றி அறிஞர்கள் கவலைப்பட மாட்டார்கள். உண்மையை உணர்பவர்கள் அவற்றால் பயன் பெறுவார்கள். அப்படிப் பயன்பெற்றவர்கள், அறியாமையால் அவற்றைப் பழிப்பவர்களை நோக்கி இரங்குவார்கள். “பாவம் இவர்கள் உண்மையை அறியாமல், இவற்றால் பயனை அடையாமல் வாழ்க்கையை வீணாக்குகிறார்களே!” என்று இரக்கம் கொள்வார்கள்.

இறைவனுடைய தோற்றம், அவனுடைய திருமேனியில் உள்ள பொருள்கள் யாவுமே பல உண்மைகளைப் புலப்படுத்தும். அவன் தன் திருமேனியில் என்பை அணிந்திருக்கிறான். முழு எலும்பாகிய எலும்புக்கூட்டைக் கங்காளம் என்பார்கள். அந்தப் பெருமான் கங்காளத்தைத் தோளின் மேல் சுமந்துகொண்டிருக்கிறான். அதைக்கண்டு, “அருவருக்கத் தக்க எலும்பை அணிந்தவனையா கும்பிடுவது?" என்று எண்ணக்கூடாது.

சடையப்ப வள்ளல் வீட்டுக்கு ஒருவர் விருந்தாளியாகப் போனார். வள்ளல் பெரிய செல்வர் என்று கேள்வியுற்றிருந்தார். அவர் சடையப்பருடைய வீட்டை அடைந்தபோது, அந்த வள்ளல் கிழே சிந்தியிருந்த நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட விருந்தாளிக்கு, சிந்தின சில நெல்லைப் பொறுக்குகிறாரே! இந்த அற்பமான பொருளை இப்படிப் பெரிதாக மதிப்பவர் எப்படிப் பெரிய வள்ளலாக இருக்கக்கூடும்' என்று எண்ணினார். நெல்லைப் பொறுக்கி எடுத்தபிறகு சடையப்பர், 'வாருங்கள், சாப்பிடப் போகலாம் என்றார். அப்போது விருத்தாளி, சிந்திய வைரமணிகளைப் பொறுக்குவது போல, நெல்லைப் பொறுக்கினீர்களே! யாரையேனும் விட்டு அவற்றைப் பெருக்கித் தள்ளும்படி