பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

245


செய்திருக்கலாமே!" என்றார், அதைக் கேட்டுச் சடையப்ப வள்ளல் புன்னகை பூத்தார்; ஒன்றும் பேசவில்லை.

இருவரும் உணவு உண்ண அமர்ந்தார்கள். அப்போது சில வைரமணிகளை விருந்தாளியின் இலையில் போடச் சொன்னார் வள்ளல். அதைப் பார்த்துப் பிரமித்தார் விருந்தாளி.

சாப்பிடுங்கள்" என்றார் சடையப்பர்.

"இதையா?” என்று கேட்டார் விருந்தாளி.

“நெல்மணிகளைவிட வைரமணிகள் உயர்ந்தவை என்றீர்களே! இப்போது இதை உண்ணுங்கள்” என்றார் வள்ளல். விருந்தாளி திகைத்தார்.

எவ்வளவு செல்வம் இருந்தாலும் உணவுக்கு ஒப்பாகாது. அந்த உணவுப் பொருளை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிறிதளவு நெல் என்று ஒதுக்கிவிட்டால் அதனால் கிடைக்கும் ஒருபிடி சோற்றை வீணாக்கினவராவோம். அந்த ஒரு பிடி சோற்றுக்குத் திண்டாடுகிறவர்கள் உலகில் இருக்கிறார்கள்” என்று வள்ளல் உண்மையை உணர்த்தியபொழுது விருந்தாளி, தம் அறியாமைக்கு இரங்கினார்.

இவ்வாறு ஊன்றிப் பார்க்காமல், மேலேழுந்தவாரியாகப் பார்த்து ஒன்றைத் தீர்மானிக்கக்கூடாது.

இறைவன் தேவர்களின் எலும்பை அணிந்திருக்கிறான். பிரமன் திருமாலாகியவரின் முழு எலும்பாகிய கங்காளத்தைத் தோள் மேலே புனைந்திருக்கிறான். இவை அவனுடைய நித்தியத் தன்மையைக் காட்டுவதோடு பதவி, பெருமை, பொருள் யாவும் நிலையாதவை என்பவற்றையும் காட்டும். யார் அழிந்தாலும் அவன் அழியாத தகைமையன் என்று அவனை இனம் கண்டுகொள்ளும் அடையாளங்கள் அவை.