பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38. நல்லோரை மருவுதலும்
அல்லோரை ஒருவுதலும்


இறைவனுடைய நினைவு நம் உள்ளத்தில் எப்போதும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நாம் எந்தத் தவறும் செய்யமாட்டோம். மனம் அப்படி ஒன்றையே உறுதியாக எண்ணி நிலைபெறும் ஆற்றலுடைய தன்று. அது வாயுவின் அம்சம். ஆதலின் எப்போதும் சலித்துக்கொண்டே இருக்கும். நாம் இறைவனை நினைந்தும், இறைவன் புகழைப் பேசியும் இறைவன் வழிபாட்டில் ஈடுபட்டும் வாழ வேண்டுமானால், நாம் அவ்வாறு செய்யவேண்டும் என்று விரும்பி முயற்சி செய்தால் மட்டும் போதாது. பல காலத்து வாசனைகள் நம்மைப் பல திசைகளில் இழுக்கும். ஆதலால் நம்முடைய முயற்சிக்கு உறுதுணையாக இறைவனுடைய அடியார்களின் கூட்டத்தில் நாம் சேரவேண்டும். சாது சங்கந்தான் ஒருவனே எளிதில் நல்ல வழியிலே நடப்பதற்குத் துணை செய்யும். மனிதன் சமுதாயத்துக்குள் வாழ்கிறவன். தன்னை அறியாமலே சுற்றுச் சூழ்நிலைக்கு ஏற்ப அவனுடைய பழக்க வழக்கங்கள் மாறிவிடும். ஓநாயால் வளர்க்கப்பட்ட பையன், மனித இனத்தில் சேர்ந்த பிறகும் ஓநாயைப் போலவே உணவுண்ணுதல் முதலியவற்றை செய்து வந்தான் என்ற செய்தியை முன்பு பத்திரிகையில் படித்திருக்கிறோம்.

ஆகையால் பெரியவர்கள், நாம் உய்யவேண்டுமானல் சாது சங்கத்தில் சேர வேண்டுமென்று வற்புறுத்துகிறர்கள். "சார்பினாற் சார்பு கெடஒழுகின்” என்று வள்ளுவரும் சொல்கிறார். அன்பர்களோடு சேர்ந்து பழகினால் நாமும் அவர்களைப் போல ஆகிவிடுவோம். அவர்கள் சேர்ந்துள்ள