பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

காதல் சிறந்து இறைவன் சேவடியே சேர்ந்தவர்.' அவருடைய இடரை இன்னும் இறைவன் களையவில்லை.

இந்த இரண்டையும் நினைத்தபோது காரைக்காலம்மையாருக்கு மனம் உருகியது இறைவனிடமே இந்தச் செய்தியை முறையிடலாம் என்று தொடங்கினார், “எம்பெருமானே! தேவர்கள் காலில் விழுந்த அந்தக் கணத்திலே அவர்களுக்கு அருள் செய்து மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானாக நிற்கும் நீ, பிறந்து மொழி பயின்ற பின் எல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்த என் இடரை எப்போது தீர்க்கப் போகிறாய்' என்று விண்ணப்பித்துக் கொள்கிறார்.

"பிறந்து மொழிபயின்ற பின்எல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்—நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே!
எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?”

(நிறம்திகழும் - நிறம் விட்டுவிளங்கும். மைஞான்ற - கரிய நிறம் வழிவது போலத் தங்கும்.)

அற்புதத்திருவந்தாதியில் உள்ள முதற் பாட்டு இது.