பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

லாமோ, அப்படியெல்லாம் பார்ப்பாள். புதிய புதிய அணிகலன்களைப் பண்ணிப் பூட்டுவாள். இறைவனுடைய பக்தியில் ஈடுபட்ட அருட்புலவர்கள் இறைவனை எப்படியெல்லாம் பாடலாம் என்று யோசித்து யோசித்துப் பாடுவார்கள். கற்பனையைத் தூண்டி விட்டுச் சொல்லோவியம் படைப்பார்கள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் திருவாய் மலர்ந்தருளிய அருட்பாடல்களைப் பார்த்தால் இந்த உண்மை புலனாகும்.

அவர்கள் சில சமயம் இறைவனை நோக்கிப் புலம்புவார்கள்; சில சமயம் அவனுக்கு ஆளான தன்மையை நினைந்து பெருமிதம் அடைவார்கள்; சிலசமயம் அவனுடைய திருமேனி அழகிலே சொக்கிப் போய் விடுவார்கள்; அவன் குணங்களிலே கரைந்து நிற்பார்கள்; அவன் கருணையைக் கூறி உருகுவார்கள்; அவன் பராக்கிரமத்தைச் சொல்லி வியப்பார்கள்; அவனை அடைந்து உய்யுங்கள் என்று உபதேசிப்பார்கள்; அவனையே நோக்கி, இப்படிச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்வார்கள். இவ்வாறு பல வகையில் பாடும்போது ஒன்பது சுவைகளும் அந்தப் பாடல்களில் தனித்தனியே ததும்பி நிற்கும்.

காரைக்காலம்மையாரும் இந்த இனத்தைச் சேர்ந்தவரே. அவர் பாடிய பாடல்களில், பல வேறு நிலைகளில் அவர் இருந்து பாடுவதை நாம் பார்த்து வருகிறோம். அவருடைய கற்பனை உணர்ச்சி செயற்படும் பாடல் ஒன்றை இப்போது பார்க்கப் போகிறோம். இறைவனுடைய அங்கத்துக்கும் அணிகலன்களுக்கும் உவமைகளைச் சொல்லி மகிழ்கிறார் அம்மையார்.

இறைவனுடைய திருமேனி செக்கர் வானத்தைப் போலச் சிவந்திருப்பது. அவனுடைய திருமார்பை அம்மையார் பார்க்கிறார். அது அந்திச் செவ்வானம் போலக் காட்சி அளிக்கிறது. அவன் பாம்பையே அணிகலனாக அணிந்திருக்கிறான். அதுவே அவனுக்கு மாலையாக இருக்கிறது. எல்லோ