பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259

ரும் மாணிக்க மாலையைப் புனைவார்கள். அவனோ மாணிக்கத்தைத் தரும் பாம்பையே தாராகப் புனைந்திருக்கிறான். மார்பிலே அணியும் மாலைக்குத் தார் என்று பெயர். அவனுடைய மார்பில் தார் போல அமைந்து பாம்பு விளங்குகிறது.


—பூண்டதோர்
தார்ஏறு பாம்புடையான் மார்பில்
[தார் ஏறு பாம்பு—மாலையின் தன்மையை உடைய பாம்பு.]

அந்த மார்பில் பளிச்சென்று ஒரு கொம்பு தோன்றுகிறது. அது பன்றியின் கொம்பு. பன்றி கருமையாக இருந்தாலும் அதன் கொம்பு வெள்ளை வெளேரென்று இருக்கும். இறைவனுடைய திருமார்பில் அந்த வெண்மை விட்டு விளங்குகிறது; தழைத்து இலங்குகிறது. கூரிய முனையையுடைய கொம்பு அது.


மார்பில் தழைத்து இயங்கு
கூர்ஏறு கார் ஏனக் கொம்பு.
[ஏனம்-பன்றி.]

திருமால் வராகாவதாரம் எடுத்துக் கடலுள் ஆழ்ந்திருந்த பூமியை மேலெடுத்து நலம் செய்தார். அப்பால் அந்த மிடுக்கினல் செருக்குற்று உலகைக் கலக்கியபோது அந்த ஏனத்தின் ஆற்றலை அடக்கி அதன் கொம்பைச் சிவபெருமான் தன் திருமார்பில் அணிந்து கொண்டார் என்பது புராண வரலாறு.

இப்போது காரைக்காலம்மையார் திருமார்பைப் பார்த்து, அதில் தார் போல விளங்கும் பாம்பையும் அங்கே உள்ள பன்றிக் கொம்பையும் பார்க்கிறார். அவருடைய கற்பனை உணர்ச்சி இயங்கத் தொடங்குகிறது.

இறைவனுடைய திருமார்புக்கு அந்திச் செவ்வானத்தை உவமை கூறலாம் என்று எண்ணினார். அந்த வானத்தில் மதியைப் போல இருக்கிறது என்று ஏனக் கொம்பைச்