பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

சொல்லலாமா? இந்தக் கொம்பும் வளைந்திருக்கிறது வெண்மையாக இருக்கிறது. அதன் அருகே பாம்பு இருக்கிறதே! அதை எப்படி இந்தக் கற்பனைப் படத்தில் பொருத்துவது? பாம்புக்கும் சந்திரனுக்கும் என்ன உறவு? உறவாவது! பகை அல்லவா இரண்டினிடையும் இருக்கும்?

இப்போது அம்மையாருக்குப் பளிச்சென்று ஒரு கருத்துத் தோன்றிவிட்டது. வானத்தில் எழுந்த சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது; தீண்டி மெல்ல மெல்ல விழுங்குகிறது. முழுச்சந்திரனாக இருந்த வடிவம் வரவரக் குறைந்து பிறையாக ஆகிவிட்டது. விழுங்கின பாம்பு அருகில் இருக்க முக்கால் பங்கு விழுங்கப்பட்ட சந்திரன் வடிவு குறைந்து சிறுத்துத் தோன்றுகிறது. இப்படிச் சொல்லலாம் அல்லவா?


ஈண்டு ஒளிசேர் வானத்து
எழுமதியை வாளரவம்
தீண்டச் சிறுகியதே போலாதே?

'நிறைந்த ஒளி சேர்ந்த வானத்தில் எழுந்த முழுச் சந்திரனைப் பாம்பு தீண்டி விழுங்கியதனால் அது சிறுத்துப் போனது போல இந்தக் காட்சி இருக்கவில்லையா? என்று கேட்கிறார் அம்மையார்.

அவருடைய கற்பனையில் மூன்று பொருள்களில் இரண்டுக்கு உவமை சொன்னார். இறைவன் மார்புக்குச் செவ்வானத்தையும் ஏனக்கொம்புக்கு மதியையும் சொன்னார். பாம்பை அப்படியே வைத்துக்கொண்டார். அதை ராகுவென்று கற்பனை பண்ணிக் கொண்டார்; அவ்வளவுதான்.


ஈண்டு ஒளிசேர் வானத்து
எழுமதியை வாள்அரவம்
தீண்டச் சிறுகியதே