பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261


போலாதே?—பூண்டதோர்
தாரேறு பாம்புடையான்
மார்பில் தழைத்திலங்கு
கூர்ஏறு கார்ஏனக் கொம்பு.

[அணிந்த ஒப்பற்ற மாலையின் தன்மையை உடைய பான்மை உடைய சிவபிரானுடைய திருமார்பில் நன்றாகச் சிறந்து விளங்கும் கூர்மையை உடைய, கடுமையான பன்றியின் வெண்மையான கொம்பு, நெருங்கிய ஒளி சேர்ந்த, வானத்தில் எழுந்த சந்திரனை விடத்தையுடைய பாம்பு தீண்டி விழுங்க அது சிறுத்ததுபோல இருக்கிறதல்லவா?

ஒளிசேர் என்பது மதிக்கு அடை. போலாதே-போலாதோ; வினா. தழைத்து இலங்கு-விட்டு விளங்கும். கார்-கருமை. கொம்பு போலாதே?]

இது அற்புதத் திருவந்தாதியில் 39-ஆவது பாட்டு.