பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40. பொன் மலையும் வெள்ளி மலையும்

இறைவன் தன் அடியார்களுக்கு எத்தனை எத்தனை விதமாகக் காட்சி அளிக்கிறான்! பராசக்தியாகிய அம்பிகையைத் தனக்குள்ளே அடக்கிக்கொண்டு தனியொருவனாகச் சில சமயங்களில் காட்சி அளிக்கிறான்.

“அவ்வுரு, தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என்று புறநானூறு சொல்கிறது. உலகத்தை மீண்டும் படைக்கத் தொடங்கும்போது, முதல் படைப்புக் கடவுளாக இருக்கிறான் சிவபெருமான். எவன் சர்வ சங்காரத்தைச் செய்கிறானோ எவன் எல்லாம் ஒடுங்கத் தான் மாத்திரம் ஒடுங்காமல் இருக்கிறானோ, அவன்தான் முதலில் மீண்டும் படைக்கவேண்டும். உள்ளே இருக்கும் அறைகளை எல்லாம் வெவ்வேறு மனிதர் பூட்டுகிறார்கள். எல்லோரும் பூட்டிக் கொண்டு வெளியில் வந்தபிறகு வாயிற்கதவைக் கடைசியாகப் பூட்டி அதன் சாவியை வைத்திருக்கிறான் ஒருவன். மறுபடியும் அந்த வீட்டையும் அறைகளையும் திறக்க வேண்டுமானால் முதலில் பூட்டின முறைப்படியே திறக்க முடியுமா? முதலில் சமையலறையைப் பூட்டினாள் ஒரு பெண். அவளே முதலில் பூட்டினவளாகையால் அவளே முதலில் திறக்கட்டும் என்று சொல்லலாமா? அவளால்தான் திறக்கமுடியுமா? யார் கடைசியில் வாயிற் கதவைப் பூட்டினானோ, அவன்தான் திறக்கும்போது முதலில் வாசற்கதவைத் திறக்கவேண்டும். அதற்குப் பிறகே மற்றவர்கள் தங்கள் தங்கள் அறையைத் திறக்க முடியும்.

அதுபோல இறுதிச் சங்காரத்தை நிகழ்த்தும் பரமசிவனே முதலில் படைப்பைச் செய்யவேண்டும்; படைப்பு முதலிய