பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263


வற்றை இயற்றும் மூர்த்திகளைப் படைக்கவேண்டும். தத்துவங்களையெல்லாம் சர்வ சங்கார காலத்தில் தனக்குள்ளே ஒடுக்கிக் கொண்டவன், படைப்புத் தொடங்குகையில் அவற்றை மலரவிடுகிறான்.

இவ்வாறு முதற்படைப்புத் தொடங்கும்போது, அவன் தன்னையே படைத்துக் கொள்கிறான். அருவமாக இருந்த தான், அருவுருவாகிய லிங்கோற்பவ மூர்த்தியாகிறான். பிறகு உருவம் பூணுகிறான். பல பல உருவங்களை எடுக்கும் அப்பெருமான் முதல் முதலாக மாதிருக்கும் பாதியனாக, அர்த்தநாரீசனாகத் தோற்றுகிறான். தன்னுள் அடக்கியிருந்த, சக்தியைத் தன்னோடு ஒட்டிய ஒரு பாதியாகக் காட்டுகிறான். அதிலிருந்து மற்றப் படைப்புகள் தொடங்குகின்றன; தத்துவங்கள் விரிகின்றன. இதை ஐங்குறுநூறு என்னும் சங்க நூல் கூறுகிறது.

“நீலமேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.”

என்பது அதில் உள்ள பாட்டு. நீலமேனி வாலிழையாகிய அம்பிகையை ஒரு பாகத்தில் கொண்ட ஒருவனாகக் காட்டிப் பிறகு, அந்த அர்த்தநாரீச வடிவத்திலிருந்து அந்தர்மத்தியபாதலமென்னும் மூவகை உலகங்களையும் தோன்றச் செய்கிறான்.

ஆகவே, இறைவன் அருவிலிருந்து அருவுருவாகி, அதிலிருந்து உருவாகக் கோலம் கொள்ளும்பொழுது, முதல்முதலில் எடுக்கும் வடிவம் இந்த அர்த்தநாரீசத் திருக்கோலம். இதுவே எல்லாவற்றிலும் பழமையானதாலின் இதை,"தொன்மைக் கோலம்" என்று மாணிக்கவாசகர் சொல்வார்.

"தோலும், துகிலும், குழையும் சுருள்தோடும்,
பால்வெள்ளை நீறும், பசுஞ்சாந்தும், பைங்கிளியும்,