பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264



சூலமும், தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ."

இந்தப் பழைய கோலத்தை நினைக்கிறார் காரைக்கால் அம்மையார். இறைவன் தன் வாமபாகத்தில் பூங்கொம்பு போன்ற இறைவியை வைத்திருக்கிறான். அவன் மிகப் பழையவனானாலும் இளமை மாறாத குழகனாக இருக்கிறான். தன்னைச் சார்ந்த சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நரைதிரை மூப்பில்லாத இளமையை வழங்கும் அண்ணல் இளமையெழில் ததும்புவனாக இருப்பது வியப்பன்று. இந்த அர்த்தநாரீசக் கோலத்தை எண்ணுகிறார் அம்மையார்.

கொம்பினை ஒர் பாகத்துக் கொண்ட குழகன்

இப்போது அவன் வெவ்வேறு வகையாகத் தோற்றம் அளிப்பதை மனக்கண்ணால் எண்ணிப்பார்க்கிறார். அவனுடைய திருமேனி செக்கச்செவேலென்று இருக்கும். "சிவனெனும் நாமம் தனக்கே உரிய செம்மேனி எம்மான்" என்று அப்பர் பாடுவார். அந்த மேனிக்கு அவர் பவளத்தை உவமை கூறுவார். "பவளம் போல் மேனியில்" என்று சொல்வார். அந்த அழகிய பவளம் போன்ற மேனியைத் தியானிக்கிறார் அம்மையார்.

இறைவன் பெரிய திருவுருவத்தோடு காட்சியளிக்கிறான். அடிமுடி காண்பரிய செஞ்சோதி பிழம்பாக நின்றவன் அல்லவா? அம்மையாரின் அகக்கண்ணில் அவன் பூமிக்கும் வானத்துக்குமாக ஓங்கி உயர்ந்து ஆடாமல் அசையாமல் நிற்கிறான்; மலைபோல நிற்கிறான். முன்பு பவளம் போன்ற மேனி என்று சொன்னவர் இந்த வடிவைக்கண்டு, 'இது மலை போல அல்லவா இருக்கிறது?’ என்று எண்ணுகிறார்.

மலைகளில் சிறந்தது மேருமலை. அதில் தேவர்கள் குடியிருப்பதனால் சுராலயம் என்ற பெயர் பெறும். சூரிய