பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265

சந்திரர்கள் அதை வலமாக வருவார்கள். அது பொன்மயமானது; பொன்மலை என்று பெயர் பெறும். அதை இறைவன் கையில் வில்லாக வளைத்து வைத்துக் கொண்டதுண்டு.

மற்றொரு மலை கயிலாயமலை. அது மிகவும் புனிதமானது. எம்பெருமான் வீற்றிருக்கும் இடமாதலின் அது மிகமிகப் புனிதமானது. அது வெள்ளிமயமான மலை.

இறைவனுடைய பெரிய வடிவத்தை அகக்கண்ணில் கண்ட அம்மையாருக்கு, ‘இந்தப் பெரிய திருமேனிக்கு எதை உவமை சொல்வது?’ என்ற ஆராய்ச்சி எழுகிறது. செம்பொன்மலையாகிய மேருவைத்கான் சொல்லவேண்டும் என்று தீர்மானிக்கிறார்.


குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னம்—செம்பொன்
அணிவரையே போலும்.

என்று பாடினார். இறைவன் திருமேனி செம்பொன் வண்ணமுடையது என்பதை, “பொன்னர் மேனியனே” என்ற சுந்தரர் திருவாக்காலும், "பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்" என்ற சேரமான் பெருமாள் நாயனார் திருவாக்காலும் தெரிந்து கொள்ளலாம்.

அர்த்தநாரீசனாகத் தியானித்தவர், பவள உருவனாகக் கண்டு களித்தவர், இப்போது செம்பொன்மலையாகிய மேருவைப் போலத் தோன்றக்கண்டு இன்புறுகிறார். அதோடு காட்சி நிற்கவில்லை. இறைவன் தன் திருமேனி முழுதும் வெண்ணிற்றைப் பூசிக்கொண்டு தோற்றம் அளிக்கிறான். கால் முதல் தலைவரையில் ஒரே திருநீறு. வெண்ணீறு சண்ணித்த பெரிய திருமேனியை அம்மையார் இப்போது கண்டு வியக்கிறார். சிறிது நேரத்துக்குமுன் அவர் கண்டது பொன்மலை இப்போது ஒரே வெள்ளை வண்ணம். மேனித்தேசும் வெண்