பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

ணிறமும் ஒன்றிப் பளபளக்கிறது அந்தக் கோலம். இப்போது பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது! வெள்ளிமலை போல அல்லவா இருக்கிறது இக்கோலம்? கைலாசபதி கைலாசத்தை போலவே ஒளிவிடும் வெண்ணிற மலையாக நிற்கிறான். மேருவானது இப்போது கைலாசம் ஆகிவிட்டது. திருமேனி முழுதும் வெண்பொடி அணிந்தமையால் இந்தக் காட்சி மாற்றம் உண்டாயிற்று.

பொடி அணிந்தால், வெள்ளி
மணிவரையே போலும் மறித்து

கொம்பினை ஒர் பாகத்துக் கொண்ட குழகன், அந்தக் கொம்பை மறைத்துவிட்டுப் பவள வண்ணப் பெருமானாகக் கோலம் காட்டினான். பிறகு பெருவடிவம்பூண்டு செம்பொன் அணிவரையாகிய மேருவைப்போலக் காட்சியளித்தான். மறுபடியும் திருமேனி முழுதும் வெண்ணிற்றைப் பூசிக் கொண்டு வெள்ளி மணி வரையே போன்றவனானான்.

இப்படி எம்பெருமானுடைய திருக்கோலத்தில் உண்முகப் பார்வையைச் செலுத்தி, அவன் வெவ்வேறு வகையில் தன் கோலத்தைக் காட்டக்காட்ட, நாடகம் பார்ப்பதைவிட மிகுதியான இன்பத்தைப் பெற்று, வியப்பும் மகிழ்ச்சியும், மீதுார அந்தக் காட்சிகளைத் தம் அழகிய பாடலால் கோலம் செய்து, காட்டுகிறார் காரைக்கால் அம்மையார்.


கொம்பின்ஒர் பாகத்துக்கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி யதுமுன்னம்—செம்பொன்
அணிவரையே போலும்; பொடிஅணிந்தான் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து.

[பூங்கொம்பு போன்ற அம்பிகையைத் தன் ஒருபாகமாகிய - இடப்பகுதியில் ஏற்றுக் கொண்ட இளமையெழிலையுடைய சிவபெருமானுடைய அழகிய பவளம் போன்ற திருமேனி,