பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

267

முதலில் செம்பொன்னலான அழகையுடைய மேருமலையைப் போல இருக்கும்; வெண்பொடியாகிய திருநீற்றை அணிந்து கொண்டால் மறுபடியும் அந்தத் திருமேனி அழகைப் பெற்ற வெள்ளி மலையாகிய கைலாசத்தைப் போல இருக்கும்.

கொம்பு-பூங்கொம்பு. திருமுகம், கண், திருவாய், திருக்கரம், திருவடி ஆகியவைகள் மலர்களைப்போல விளங்க ஒசிந்து மென்மையாக இருத்தலின் பூங்கொம்பு என்று அம்பிகையைச் சொன்னார். ஓர் பாகம் என்றது இடப்பாகத்தை. குழகன்-இளமையுடையவன். மேனி அது; அது, பகுதிப் பொருள் விகுதி, செம்பொன் வரை-மேருமலை, அணி, -அழகு, பொடி-திருநீறு. வெள்ளி வரை-கைலாசம், மறித்து—மீட்டும். முதலில் மேருமலையாகத் தோற்றியது மறுபடியும் கைலாச மலையாகத் தோற்றுமாம்.]

இறைவன் வெவ்வேறு கோலம் காட்டி அடியார்களுக்கு அருள் புரிவான் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் 39-ஆவது பாட்டு.