பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41. நல்லோரை மருவுதலும் அல்லோரை ஒருவுதலும்


 இறைவனுடைய நினைவு நம் உள்ளத்தில் எப்போதும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நாம் எந்தத் தவறும் செய்ய மாட்டோம். மனம் அப்படி ஒன்றையே உறுதியாக, எண்ணி நிலைபெறும் ஆற்றலுடையதன்று. அது வாயுவின் அம்சம். ஆதலின் அது எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கும். நாம் இறைவனை நினைந்தும் இறைவன் புகழைப் பேசியும் இறைவன் வ்ழிபாட்டில் ஈடுபட்டும் வாழ வேண்டுமானால், நாம் அவ்வாறு செய்ய வேண்டும் என்று விரும்பி முயற்சி செய்தால் மட்டும் போதாது. பல காலத்து வாசகர்கள் நம்மைப் பல திசைகளில் இழுக்கும். ஆதலால் நம்முடைய முயற்சிக்கு உறுதுணையாக இறைவனுடைய அடியார்களின் கூட்டத்தில் நாம் சேரவேண்டும். சாது சங்கம் தான் ஒருவனை எளிதில் நல்ல வழியிலே நடப்பதற்குத் துணை செய்யும். மனிதன் சமுதாயத்துக்குள் வாழ்கிறவன். தன்னையறியாமலே சுற்றுச் சூழ்நிலைக்கு ஏற்ப அவனுடைய பழக்க வழக்கங்கள் மாறிவிடும். ஒநாயால் வளர்க்கப்பட்ட பையன், மனித இனத்தில் சேர்ந்த பிறகும் ஓநாயைப் போலவே உணவுண்ணுதல் முதலியவற்றைச் செய்து வந்தான் என்ற செய்தியை முன்பு பத்திரிகையில் படித்திருக்கிறோம்.

ஆகையால் பெரியவர்கள், நாம் உய்ய வேண்டுமானால் சாது சங்கத்தில் சேர வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். "சார்பினாற் சார்பு கெடஒழுகின்" என்று வள்ளுவரும் சொல்கிறார். அன்பர்களோடு சேர்ந்து பழகினால் நாமும் அவர்களைப்