பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271

போலச் சொல்வது கவிமரபு. தமக்குத் தாமே சொல்ல வேண்டுவதை மனதைப் பார்த்துச் சொல்வது போலச் சொல்வார்கள். இங்கே மடநெஞ்சைப் பார்த்துப் பேசும் அம்மையார், “மடநெஞ்சே, மீட்டும் மீட்டும் நீ அவன் நாமத்தையும் புகழையும் வாயாலே சொல்லு; எண்ணு” என்கிறார்.

மறித்தும் மடநெஞ்சே! வாயாலும் சொல்லிக் குறித்து நெஞ்சு நினைப்பதற்குரியது. நினைப்பது போதாது வாயாலும் சொல்ல வேண்டும்; மறுபடியும் தியானிக்க வேண்டும். குறித்தல்-தியானித்தல்.

இப்படி வாயினால் பலகால் சொல்லியும் மனத்தினால் நினைத்தும் இறைவனை வழிபட்டாலும், மனம் சில சமயங்களில் நெறி கெட்டுப் போய்விடும். அதற்கு ஒரு பாதுகாப்பு வேண்டும். அந்தப் பாதுகாப்புத்தான் அடியார் உறவு. அதைச் சொல்கிறார், 'நெஞ்சே, நீ வாயால் சொல்லித் தியானித்தால் மட்டும் போதாது. உன் நிலை உறுதிப்படாது. உறுதி பெற வேண்டுமானால் இறைவனைத் தொழுவதோடு நின்றால் பயனில்லை. உலக வாசனை உன்னை இழுத்துக் கொண்டுபோய்விடும். ஆகையால் தொண்டர்களை நாடிச் சென்று அவர்களோடு கூடி அவர்களைப் பணிந்து தொழு; பணிவிடைகள் செய்.அப்போது அவர்கள் நிலையாகப் பற்றிய வழிபாட்டுமுறை உன்னிடத்தில் வலிமை பெறும் என்று விரித்து உணரும்படி அவர் சொல்கிறார்.’

மறித்தும் மடநெஞ்சே, வாயாலும் சொல்லிக் குறித்துத் தொழுதொண்டர் பாதம்.

இது இறைநெறியால் மேலும் மேலும் ஆக்கம் பெறுவதற்குரிய முறை. இப்படிச் செய்தாலும் போதாது அழிவு வராமல் பாதுகாக்க வேண்டும். நிரம்பிய செல்வத்தைப் பெற்று அதை ஒரு கோட்டைக்குள் சேமித்து வைத்தவர்கள்,