பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273

குறித்து ஒருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்.

என்று சிவ்பெருமானை இனம் காட்டுகிறார். அடைக்கலம் புகுந்தவரை ஆட்கொள்ளும் பெருமான் அவன். அவனிடத்தில் உள்ளம் வைத்து எண்ணாதவர் கூட்டத்தை நீங்குவாயாக’ என்று நெஞ்சுக்கு உபதேசிக்கிறார். துஸ்லங்கத்தைச் சேராமல் இருக்கவேண்டும் என்பதைப் பிற அருளாளர்களும் வற்புறுத்துகிறார்கள்.

திருவே வெருவிப்
பிறிந்தேன் றினது பெருமை எண்ணாத
கருமநெஞ்சால்
மறிந்தே விழும்நர குக்குற வாய
மனிதரையே

ஆகவே, இறையருள் பெறும் நெறியில் போகப் புகுந்தவர்களுக்கு இன்றியமையாத வலிமை நல்லோர் இணக்கம்; தளர்ச்சியின்றி அந்த நெறியிற் செல்லப் பாதுகாப்பாக இருப்பது அல்லாதார் கூட்டத்தினின்றும் விலகியிருத்தல்.

மறித்தும் மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்
குறித்துத் தொழு தொண்டர் பாதம்:– குறித்து ஒருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார் மாட்டு
உள்ளாதர் கூட்டம் ஒருவு.

[அறியாமையையுடைய நெஞ்சே, இவனைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி யாரும் ஏற்றுக் கொள்ளாத சந்திரனைக் குறுங்கண்ணியாக திருமுடியிலே வைத்துக் கொண்டவரை மீட்டும் மீட்டும் வாயினாலும் புகழ் பாடித் தியானித்து, அவருடைய தொண்டர்களின் திருவடிகளைத் தொழுவாயாக; அவரை எண்ணாதவர்களின் கூட்டத்தினின்று நீ விலகி ஒழுகுவாயாக. மறித்தும்—மீட்டும்; வாயாலும் என்று சொன்னது நெஞ்சால் நினைப்பதற்கு மேலும்

நா.—18