பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

துன்பம் கண்டு இரங்கும் இயல்பு இருக்கிறது. இரக்கம் உண்டானால் தானே, கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்?

"இடர் களையாரேனும் எமக்கு இரங்குவார்" என்ற எண்ணம் தோன்றுகிறது.

"அவர் இரங்கவும் மாட்டார்” என்று ஒரு குரல் எழும்புகிறது. "இடரைக் களையவும் மாட்டார்; அப்படிக் களைவதற்குமுன் உண்டாகும் மனநிலையும் அவரிடம் இல்லை. இரக்கத்துக்கும் அவருக்கும் நெடுந்தாரம்” என்று அந்தக் குரல் மேலும் விளக்கத்தைத் தருகிறது.

"அப்படியா? எமக்கு இரங்கமாட்டாரா? இருக்கட்டும், அதனாலும் குற்றம் இல்லை.”

"இடர் களையாரேனும் எமக்கு இரங்குவார் என்ற எண்ணம் இருந்தால் அதிலும் மண் விழுந்து விட்டதே! அப்படி இருந்துமா இன்னும் நம்பிக்கை?" அந்தக் குரல் வினாவை எழுப்புகிறது. மறுபடியும் அது தொடர்கிறது.

"இடர் களேயாரேனும் எமக்கு இரங்குவார் என்று சில நல்ல மனிதர்களைப் பற்றிச் சொல்ல இடம் இருக்கிறது. நீ வழிபடும் அவரிடமோ செயலும் இல்லை; இரக்கமும் இல்லை.”

"அது கிடக்கட்டும். தாம் ஒன்றைத் தராவிட்டாலும், இரங்காவிட்டாலும், 'இந்த வழியிலே போ' என்று வழிகாட்டுவார் அல்லவா? இடர் களைவார் என்று இருந்தேன். இல்லை யென்று சொல்கிறாய். இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும் இன்ன வழியிற் போ என்று படரும் நெறி பணிப்பார் அல்லவா? அது போதுமே! அந்த நெறியிற் சென்று நான் உய்கிறேன்.”

படரும் நெறியும் பணியார். அவர் அப்படிக் கை காட்டுவார் என்று காத்திராதே. அவரிடம் என்ன இருக்கிறது ஆசைப்பட?”