பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

என்னும் பொருளுடையது; எச்சஉம்மை. குறித்து-தியானித்து; "குறியைக் குறியது குறித்து” என்பது கந்தர் அநுபூதி. குறித்து—சந்திரனுடைய அவல நிலையை எண்ணி ஒருவரும் என்பதில் உள்ள உம்மை தொக்கது. திங்களாகிய குறிய கண்ணி; கண்ணி-தலையில் சூடும் மாலை. கொண்டார் மாட்டு-கொண்டாரை; உருபு மயக்கம். ஒருவு-நீங்கு.

தொண்டரை மீட்டும் மீட்டும் வாயால் புகழ் கூறி அவர்களை எண்ணி நாடிச் சென்று அவர்கள் பாதத்தைத் தொழு என்றும் பொருள் கொள்ளலாம்; குறித்து என்பதற்கு அவர்களை நாடி என்று பொருள் கொள்க.]

நல்லோரின் இணக்கமும் அல்லோரை நீங்குதலும் இறைவன் அருளைப் பெறும் உபாயங்கள் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் 40ஆவது பாட்டு.