பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

277

சில இடங்களில் காணலாம். திருமால் வேறு, சிவன் வேறு என்று வேறுபடுத்தாத சமரச உணர்ச்சியை வளர்க்கச் சங்கர நாராயணர் திருக்கோலமும், சிவன் வேறு, சக்தி வேறு என்று பேதபுத்தி பண்ணாமல் இருக்க உமையொரு பாதி வடிவமும் உள்ளன.

இந்த இரண்டு திருக்கோலங்களையும் எண்ணி, இறைவனிடம் உள்ள நெருக்கத்தினால் கேட்கிறார் காரைக்கால் அம்மையார். இறைவனிடம் பக்தி முறுக முறுக அவனோடு சுதந்தரமாக உரையாடும் உரிமை உண்டாகிவிடுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாக்கில் அத்தகைய இடங்கள் பல உண்டு. மற்றவர்கள் பாடல்களில் ஒவ்வோரிடத்தில் இருக்கும். காரைக்காலம்மையார் திருப்பாடல்களில் அவ்வாறு வரும் பாடல்களை முன்பும் பார்த்தோம்; பின்பும் பார்க்கப் போகிறோம். இப்போது ஒரு பாட்டைப் பார்க்கலாம்.

இறைவனை நோக்கிச் சொல்கிறார், அம்மையார்; எம்பெருமானே, உன்னை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பாதி அதே நிறம் படைத்த உமாதேவியார் இருக்கிறார். இரண்டு பக்கத்திலும் உன்னுடைய உருவத்தைக் காண முடியவில்லை. நின் நிறம் பவளம் போன்ற செந்நிறம். நான் பாக்கிறதோ எல்லாம் நீல நிறம். உன்னுடைய திருவுருவத்துக்குரிய நிறத்தை என்னால் காண முடியவில்லை. இந்தக் கோலத்தை அணுகிப் பார்த்தாலும் உன்னுடைய உருவமும் தெரியவில்னர் அம்பிகையின் முழு உருவமும் தெரியவில்லை. இந்த வடிவம் எத்தகையதென்று சொல்வது?

உலகத்தை அளந்தவன் திருமால். அவன் உன் திருவுருவத்தில் ஒரு பாதியில் இருக்கிறான் என்கிறார்கள்.

ஒருபால் உலகு அளந்த மாலவனாம்

வேறு பலர், உன் ஒரு பாதியில் உமாதேவியார் எழுந்தருளியிருக்கிறார் என்கிறார்கள்.