பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

ஒருபால் உமையவளாம்.

அப்படியானால் உன்னை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? மின்னலைப் போன்று காட்சி தரும் உமாதேவியாரின் முழு வடிவத்தையும் எப்படித் தரிசிப்பது? உன்னைக் காணவேண்டும் என்று எண்ணி, உன்னை நேர்பட்டுத் தரிசித்துக் கொள்ளலாம் என்றால், இரண்டு பக்கத்திலும் நின்னுருவமாக எங்களுக்கு நிறம் தெரிவதில்லை. நின் உரு அடியோடு தெரிவதில்லை; மின்னனைய பெருமாட்டியின், உருவமும் முழுமையாகத் தெரிவதில்லை.

இருபாலும்
நின்உருவம் ஆக நிறம்தெரிய மாட்டோமால்,
நின்உருவோ, மின்னுருவோ நேர்ந்து.

இந்தத் தடுமாற்றத்தைத் தருகிறது அவர்கள் சொல்லும் கோல வருணனைகள்.

ஒருபால் உலகு அளந்த மாலவனாம்; மற்றை
ஒருபால் உமையவளாம்; என்றால்—இருபாலும்
நின்உருவம் ஆக நிறம்தெரிய மாட்டோமால்
நின்உருவோ மின்உருவோ நேர்ந்து.

[இறைவனே, உன்னுடைய ஒரு பாகத்தில் இருப்பவன் உலகத்தைத் தன் திருவடியால் அளந்த திருமாலாம்; மற்ற ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவளாம்; இவ்வாறு சொன்னால் அடியேங்கள் இரண்டு பக்கத்திலும் நின் திருவுருவமாக இதுதான் நிறம் என்று தெரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லோம்; இன்னும் அணுகிப் பார்த்து நின் உருவமோ அல்லது மின்னலைப் போன்ற உமையவளின் உருவமோ என்றும் அறியமாட்டோம்.

[நிறம் தெரியமாட்டோமால் என்பதைப் பின்னும் கூட்டி, நேர்ந்து நின் உருவோ, மின் உருவோ, நிறம் தெரிய மாட்டோமால்' என்று பொருள் கொள்க. அன்றி, நின்