பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

279

உருவோ, மின் உருவோ என்பதை நேர்பட்டுச் சொல்வாயாக என்று ஒரு சொல் வருவித்து முடிப்பதும் ஆம். நேர்ந்து—நேர்பட்டு.]

“ஒரு பாதி மால்கொள ஒருபாதியை உமையாள் கொள மற்றிரு பாதியிலும் இறந்தான் புராரி” என்று ஒரு பழைய பாட்டு உண்டு.

திருமாலும் உமையவளும் இடப் பாகத்தையே மேற்கொண்டிருப்பதாகக் கூறுவர். ஆனாலும், இங்கே வேடிக்கையாகச் சொல்லப் புகுந்தவராதலின் இன்ன பாகம் என்று சொல்லாமல், அவர் ஒரு பாதி, இவள் ஒரு பாதியானால், நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்பது போலப் பாடினார்.

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 41-ஆவது பாடல்.