பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

இருக்கிற பாம்பு அதை உண்ண, அதனால் அது நைந்து போய் சிறியதாகி விட்டதோ?

நேர்ந்து அரவம் கொள்ளச் சிறுகிற்றோ?

சே, சே ! இறைவன் திருமுடிமேல் இருக்கும் சந்திரன் எவ்வளவு சிறந்த பதவியில் இருக்கிறான்! இறைவனைச் சார்ந்தவர்களுக்கும் பகைவர்களால் துன்பம் வருமா? காலனால் உண்டாகும் பயத்தையே போக்கும் பெருமான், இந்தப் பாம்பு பயத்தைப் போக்க மாட்டானா? அது மட்டும் அன்று, இறைவனோடு தொடர்புடையவர்கள் அந்தத் தொடர்பு உண்டாவதற்கு முன்பு எப்படி இருந்தாலும், அவன் தொடர்பு ஏற்பட்ட பிறகு நல்லவர்கள் ஆகிவிடுவார்களே! இரும்பு பொன்னானாற் போலக் கொடிய மனம் உடையவர்களெல்லாம் மிகவும் மென்மையான உள்ளம் படைத்தவர்கள் ஆகிவிடுவார்களே! அப்படி இருக்க, இறைவன் திருமுடியில் உள்ள பாம்பு தன்னுடன் அங்கே வாழும் சந்திரனுக்குத் தீங்கு புரியுமா? நல்ல அரசர்கள் ஆட்சி புரிந்தால் இயற்கையாகப் பகைமை பாராட்டும் புலியும் பசுவும் ஒரு துறையில் நீர் உண்ணும் என்பார்களே! சிவபெருமானிடம் உள்ளவற்றினூடே பகைமை உணர்ச்சி இருக்க நியாயம் இல்லையே! ஆகையால் இது பிறையாக இருப்பதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்க வேண்டும்?—இவ்வாறு ஓடுகிறது அவர் சிந்தனை.

'தாம் அணிந்து கொள்ளும் அணிகலன்களைத் தாமே ஆய்ந்தெடுத்துப் புனைந்து கொள்வது யாவருக்கும் இயல்பு. இறைவன் சந்திரனைத் தன் திருமுடியில் அணிந்து கொள்ள விரும்பினான். முழுமதியாக அணிந்து கொண்டால், அது இடத்தை அடைத்துக் கொள்ளும். கங்கை, கொன்றை, எருக்கு, தும்பை, பாம்பு முதலியவற்றிற்கும் இடம் இருக்க வேண்டும். ஆகையால் அந்தச் சந்திரனைச் சிறிதளவு வெட்டி வளைவாக அழகுபட வைத்துக் கொள்ளலாம் என்று இறைவன் நினைத்திருக்கிறான். எந்த அளவில் வைத்துக்