பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

283

கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று ஆராய்ந்து பதினாறு கலைகளையுடைய சந்திரனில் ஒரு கலையை மாத்திரம் அளவாக அறிந்து அதை வைத்துக் கொண்டானோ?’ இப்படியும் ஓர் ஐயம் எழுகிறது.

இறைவனோடு நெருங்கி வேடிக்கையாக எழும் சிந்தனைகள் இவை. இப்போது இறைவனிடமே அம்மையார் தம் ஐயத்தை எழுப்பி வினவுகிறார்.

‘இறைவனே, நானும் பார்க்கிறேன். இளம் பிள்ளையைப் போல இருக்கிற இந்தச் சந்திரன், அன்று கண்ட மேனிக்கு அழிவு இல்லாமல் வளராமலே இருக்கிறதே! இது வளராதோ? ஒருகால் பாம்பு விழுங்க அதனால் சிறுத்து விட்டதோ? அல்லது, நீயே அதை வேண்டும் அளவுக்கு அறிந்து தலையில் பொருத்திக் கொண்டாயோ! என்று கேட்கிறார்.

நேர்ந்து அரவம் கொள்ளச் சிறுகிற்றோ? நீ அதனை
ஈர்ந்து அளவே கொண்டு இசைய வைத்தாயோ?—பேர்ந்து
வளம் குழவித் தாய்வளர மாட்டாதோ? என்றோ?
இளங்குழவித் திங்கள் இது

.

[எம்பெருமானே, இளம் குழவித் திங்கள் இது - இளைய குழந்தை போன்ற சந்திரனாகிய இது, அரவம் கொள்ள - நீ அணிந்திருக்கும் பாம்பு பற்றிக் கொள்ள, நேர்ந்து-நைந்து. சிறுகிற்றோ - சிறியதாயிற்றோ? அன்றி நீ அதனை ஈர்ந்து - நீயே அதை அறிந்து. அளவே கொண்டு-உனக்கு வேண்டும் அளவில் கொண்டு, இசைய வைத்தாயோ - உன் திருமுடியில் பொருந்தும்படி வைத்தாயோ? குழவித்தாய் - இளமையை உடையதாய் வளம் - இதன் வளப்பம், பேர்ந்து-மறுபடியும். வளரமாட்டாதோ-வளராதோ? என்றோ- என்ன காரணம்?