பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

குறிப்பாகச் சொல்வதற்குமேல், வெளிப்படையாகச் சொல்லித் தடுப்பதற்கு நமக்குத் துணிவு இல்லை. அவருக்கு. ஏதோ அறிவுரை சொல்வதுபோல் அல்லவா ஆகிவிடும்? அதற்குரிய தகுதி நமக்கு ஏது? அவரிடத்தில் அன்பு உடையோம் என்பது ஒன்றுதான் நம் தகுதி. வேறு எந்த வகையில் அவரை அணுகி அறிவுறுத்துவதற்குரிய தகுதி நம்மிடம் இருக்கிறது?

நாம் விலக்க முடியாது. ஆனால் அந்தப் பெருமானோடு எவ்வளவு பெரியவர்கள் பழகுகிறார்கள்? அவர்களெல்லாம் நம்மைவிட எவ்வளவோ வகையில் பெரியவர்கள்; அந்தப் பெருமானோடு பழகி அவரால் நலம் பெறுகிறவர்கள் அவர்களும் இதைக் கவனித்திருப்பார்கள். ஊரார் கூறும் பழிகளும் அவர்கள் காதிலும் விழுந்திருக்கும். அப்படி இருக்க, அவர்கள் ஏன் அவரிடம் கூறி அந்தச் செய்யாமல் தடுக்கவில்லை? அவர்களே விலக்காமல் சும்மா பார்த்துக் கொண்டிருக்கும்போது நம்மால் என்ன செய்யமுடியும்? அவனைத் தடுப்பதற்கு நமக்கு ஏது ஆற்றல்?

இத்தகைய நிலையில் இருந்து பேசுகிறார் காரைக்கால் அம்மையார். சிவபெருமானைப் பற்றித்தான் சொல்கிறார். சிவபெருமானிடம் அவருக்கு உள்ள அன்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?

சிவபெருமான் என்ன செய்கிறான்? ஊரார் பழிக்கும்படி அவன் செய்கிற காரியம் என்ன?

அவன் பிச்சை வாங்குகிறான். இவ்வளவு பெரியவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் ஈகிறவன், பிச்சை வாங்கலாமா? ஊரூராகத் திரிந்து பிச்சை வாங்குகிறான். அதையாவது ஒளிமறைவாகச் செய்கிறானா? இரவிலே வெளிச்சம் போட்டுக்கொண்டு போய்ப் பிச்சை எடுக்கிறான். தன் தலை மேலே சந்திரனைச் சூடிக்கொண்டு, அதன் ஒளியிலே எல்லோரும் அடையாளம் தெரிந்து கொள்ளும்படி வாங்கு