பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

287

கிறான். இராத்திரியில் யாரும் இனம் கண்டுகொள்ளாதபடி வாங்குகிறான். இராத்திரியில் யாரும் இனம் கண்டுகொள்ளாத படி போய் ஓரிரண்டு இடங்களிலே வாங்கினாலும், அதிகம் பேர் அறிந்திருக்கமாட்டார்கள் என்று சொல்லலாம். இந்தப் பெருமான் மற்றவர்கள் எங்கே தன்னைத் தெரிந்துகொள்ளாமல் போகிறார்களோ என்று நினைப்பவனைப் போல, இந்தச் சந்திரனைத் தலைமேல் வைத்துக்கொண்டு, விளம்பரம் செய்கிறவர்கள் வெளிச்சம் போட்டுக்கொண்டு போகிறவர்களைப் போல, ஊர் ஊராகத் திரிந்து பிச்சை வாங்குகிறான். அதைக் கண்டு ஊரார் சிரிக்கிறார்கள்; பழிக்கிறார்கள்.

அந்தப் பெருமானிடம் நன்மை பெறுகிறவர்கள் தேவர்கள். தேவர்களுக்கெல்லாம் தலைவன் அவன்; அவன் மகாதேவன். தேசு படைத்த மேனியை உடைய தேவர்கள் நம்மை விட எவ்வளவோ பெரியவர்கள்; அறிவுடையவர்கள். அவர்களுக்கு இந்தப் பழி தெரியாதோ? அவனைபார்த்து, இந்தச் சந்திரனைத் தலையில் வைத்துக்கொண்டு சின்னப் பிச்சைக்காக ஊரூர்தோறும் திரிய வேண்டாம்?, என்று கெஞ்சிக் கேட்டுக்கொள்ளக் கூடாதோ? காலில் விழுந்து இரக்கக்கூடாதோ? அவர்கள் அப்படிச் செய்யத் தகுதி உடையவர்களாயிற்றே! நெருங்கிப் பழகுகிறவர்கள் அல்லவா? அவர்களே விலக்காமல் இருக்கும்போது நம்மால் என்ன செய்யமுடியும்?

திங்கள் இதுசூடிச் சில்பலிக்குஎன்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே’ என்று இரந்து—பொங்கொளிய
வானோர் விலக்காரேல், யாம்விலக்க வல்லமே?

நமக்குத் தெரிகிற அளவுக்கு அந்தத் தேவர்களுக்குத் தெரியாதா? அல்லது அவர்கள் விலக்குவதற்கு அஞ்சுகிறார்களா? நம்முடைய மனந்தான் இப்படி அடித்துக்கொள்கிறது. முப்பத்துமுக்கோடி வானவர்கள் இருக்கிறார்களே; அவர்களுக்குள் ஒருவருக்குக்கூடவா இந்த நினைப்பு வரவில்லை,