பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

தடுக்கும் துணிவுடையவர் ஒருவர் கூடவா அந்தக் கூட்டத்தில் இல்லை? அவர்கயை உள்ளொளியும் புறவொளியும் உடையவர்கள் என்று யாவரும் கொண்டாடுகிறார்களே! இப்படிப் பொங்கும் ஒளியையுடைய வானோர்களால் விலக்க முடியவில்லயா? அல்லது அதைப் பழியாகவே கருதவில்லையா?

அதெல்லாம் இருக்கட்டும். இது பழியை உண்டாக்கும் செயல் என்று நமக்குத் தெரிகிறது; ஆனால் விலக்கமுடியவில்லை. வானோருக்கும் இது தெரிந்திருக்கலாம்; அவர்களும் விலக்க அஞ்சுகிறார்கள் போலும்! எம்பெருமானே இதை உணர வேண்டாமோ? தன்னை ஊரார் பழிக்கிறார்களே என்ற உணர்வு அவனுக்கு இருக்க வேண்டாமோ? இவ்வளவு பெரியவன் இந்தச் சிறிய விஷயத்தை உணராமல் இருக்கலாமோ?

இப்படியெல்லாம் அம்மையாருடைய நெஞ்சில் எண்ணங்கள் ஒடுகின்றன. எப்படிச் சமாதானம் செய்து கொள்கிறது. வானோர்களின் ஆற்றில் இன்மையையும் தம்முடைய சிறுமையையும் எண்ணி அங்கலாய்த்தவர். எம்பெருமான் ஏன் இப்படிச் செய்கிறான் என்று எண்ணமிட்டார். இது பழியை உண்டாக்கும் செயல் என்பதை அவன் அறியமாட்டானா? அவன் எல்லாம் அறிந்தவனாயிற்றே! எல்லாருடைய உள்ளத்திலும் நின்று அவர்களுடைய கருத்தை உணர்பவன் அல்லவா? அப்படி இருக்க, இந்தப் பழியை அவன் அறியாமலா இருந்திருப்பான்? இருந்தும் இன்றும் இப்படிச் சில்பலிக்கு என்று ஊர் திரிகிறானே!

அம்மையாருக்குச் சிறிதே தெளிவு பிறக்கிறது. அவன் எல்லாம் அறிந்தவன்; சர்வக்ஞன். யார் யாருக்கு எது வேண்டும் என்று அறிபவன். தனக்கு இன்னது வேண்டும் என்பது அவனுக்குத் தெரியாதா? அவனைப் பற்றி முழுதும் நமக்குத் தெரியாது. அவன் நம் புலன்களுக்கு எட்டாதவன். நாம் அறியும் எந்த அளவிலும் அகப்படாதவன். அவன் செயல்களும் அத்தகையனவே. உலகியலோடு அவன் செயல்,