பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45. அருளுக்கு ஏங்குதல்


பொருள் மிகுதியாகப் படைத்தவர்கள் தம்மிடம் உள்ளவற்றைக் கொண்டு திருப்தி அடைவதில்லை; மேலும் மேலும் பொருளை ஈட்டவேண்டும் என்றே விரும்புவார்கள். அந்தத் துறையில் முயன்று கொண்டே இருப்பார்கள். தம்மைவிட மிகுதியான பொருளுடையவர்களைப் பார்த்து, அந்த அளவுக்கு நாம் பொருளைப் பெறவில்லையே!" என்று அங்கலாய்ப்பார்கள்.

இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்களும் ஒருவகையில் இப்படித்தான் இருப்பார்கள். "இன்னும் இறைவனுடைய அருள் தக்கவண்ணம் கிடைக்கவில்லையே' என்று வியப்போம். அவர்களோ, “இறைவனே, இன்னும் உன் திருவருளை நான் பெறாமல் வாணாளை வீணாகக் கழிக்கிறேனே: என்று நைந்து உருகுவார்கள். அம்பிகையின் திவ்ய தரிசனத்தைக் காணவேண்டும் என்ற தீவிரமான ஆவலைக் கொண்ட இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஒவ்வொரு நாளும், இன்றும் உன் தரிசனம் கிடைக்காமல் வீணாய்ப் போய் விட்டதே!” என்று புலம்பினர். இவ்வாறு ஏங்கும் ஏக்கந்தான் உண்மையான பக்தியின் இலக்கணம். அவ்வாறு ஏங்கி நிற்பவர்களுக்கு இறைவன் திருவருள் அநுபவம் கிடைக்கும்.

"இனிது சாலவும் ஏசற்ற வர்க்ட்கே"

என்று அப்பர் பாடுவார்.

நம்மைப் போன்றவர்கள், கோவிலுக்குப் போய் ஓர் அர்ச்சனை செய்வதோடு திருப்தி அடைகிறோம். வீட்டிலே பூஜை செய்வதில் திருப்தி அடைகிறோம். இன்று சகஸ்ரநாம அர்ச்சனை பண்ணினேன்” என்று பெருமை பேசுகிறோம். பல