பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

293

பாராட்டினாலும், இன்னும் முற்றவும் ஏறி முடிக்கவில்லையே! என்ற ஏக்கத்தைப் பெரியவர்கள் புலப்படுத்துவார்கள். அருளாளர்களின் பாடல்களில் அத்தகைய ஏக்கத்தைப் பல இடங்களில் பார்க்கலாம்.

“களக்கம் அறப் பொதுநடநான்
கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக்
காய்த்தது ஒரு காய்தான்.
வினக்கமுறப் பழுத்திடுமோ!
வெம்பிஉதிர்ந் திடுமோ!
வெம்பாது பழுக்கினும்என்
கரத்தில்அகப் படுமோ?
கொளக்கருது மலமாயைக்
குரங்குகவர்ந் திடுமோ!
குரங்குவ ராதெனது
குறிப்பில்அகப் படினும்
துளக்கம்அற உண்ணுவனோ?
தொண்டைவிக்கிக் கொளுமோ?
சோதிரு வுளம்எதுவோ?
ஏதும்அறிந் திலனே”

என்ற இராமலிங்க வள்ளலார் பாட்டில் இந்த ஏக்கத்தைத் தெளிவாகக் காணலாம். மாணிக்கவாசகர் முதலியோருடைய திருவாக்குகளிலும் இப்படி வேசறும் நிலையை காட்டும் பாடல்கள் பலப் பல.]

காரைக்காலம்மையாரும் பல இடங்களில் தம்முடைய ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்; ஆண்டவனே, ஏன் இன்னும் எனக்கு அருளாமல் இருக்கிறாய்?" என்று மனம் கரைந்து கேட்கிறார். அப்படி உள்ள பாடல் ஒன்றை இப்போது பார்க்கலாம்.