பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

295

கொடுக்கக் கொடுக்கக் குறையாத நிறைவை உடையவன் அவன். இத்தகைய நிலை வேறு யாருக்கும் இல்லை. மனிதர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருகிறவர்கள் தேவர்கள். அவர்களை வழிபட்டுப் பலபல நன்மைகளை அன்பர்கள் பெறுகிறார்கள். ஆனாலும் சிவபெருமான் வழங்கும் அளவுக்கு அவர்களால் அருள் செய்யமுடியாது. அதனால்தான் அவர்கள் தமக்கு இறைவனையே தலைவனாகப் போற்றி வழிபடுவார்கள். சிறிய ஆற்றலையுடைய மக்கள் தம்மை வழிபடும்போது அவர்களுடைய குறையைப் போக்கியருளும் பேராற்றல் அந்தத் தேவர்களுக்கு உண்டு. அதனால் அவர்கள் குறை இல்லாதவர்கள் என்று எண்ணக்க்டாது. அவர்களும் குறையை உடையவர்களே. தம்முடைய குறைகளை நீக்கிக் கொள்ள, அவர்கள் சிவபெருமானை வாழ்த்துகிறார்கள்; வணங்குகிறார்கள். அப்படி வணங்கியதனால் பிறர் தம்மை வணங்கும் பதவியைப் பெற்றார்கள்.

“வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான்; மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து
தம்மை எல்லாம் தொழவேண்டி”

என்ற திருவாசகம் இந்தக் கருத்தைப் புலப்படுத்துகிறது. சிவபெருமானுக்கு மகாதேவன், தேவதேவன் என்ற திருநாமங்கள் உண்டு. அவன் தேவர்களுக்கெல்லாம் வேண்டியதை உதவும் உபகாரி.

செம்மேனிப்
பேராளன், வானோர் பிரான்.

அத்தகைய இறைவனை அடைந்தால் தமக்கு வேறு எங்கும் கிடைக்காத அருள் கிடைக்கும் என்று அவனை அடைந்தவர் அம்மையார். வேறு யாரையும் அணுகாமல் சிவபெருமானுக்கே அடிமைப்பட்டவர். அவனையே அடைந்து வாழ்பவர். இந்த வாழ்வு இறைவனுக்கு ஆட்படுவதற்காகவே அமைந்தது என்பதை உணர்ந்து அனன்ய பக்தி,