பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

299

ஒளவைப் பாட்டி நெடுந்துாரம் நடந்து வந்த கால் வலியோடு ஒரு கோயிலுக்குள் புகுந்து, "அப்பாடி!” என்று உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டாள். இறைவன் எழுந்தருளியிருக்கும் சந்நிதிக்கு எதிரே அந்த மூர்த்தியை நோக்கிக் காலை நீட்டிக்கொண்டிருந்தாள். அதை ஒரு பையன் பார்த்தான். 'பாட்டி, பாட்டி, அங்கே சுவாமி இருக்கிறார்’ என்று அவளிடம் படபடப்பாகக் கூறினான். பாட்டி சிரித்துக் கொண்டே, "அப்படியா? தெரியாமல் நீட்டி விட்டேன். காலைத் திடீரென்று மடக்க முடியாது. தயவுசெய்து சுவாமி இல்லாத இடமாகப் பார்த்து என் காலைத் திருப்பிவிடு, அப்பா!' என்றாள். அந்தப் பையன் அறிவுள்ளவன். 'சுவாமி இல்லாத் இடமா?” என்று அப்படியே யோசனையில் ஆழ்ந்து விட்டான். சுவாமி இல்லாத இடம் ஏது?

இந்த உண்மை அநேகமாக எல்லாருக்கும் தெரியும். ஆனால் எங்கும் இருக்கிற அந்தக் கடவுளை நம்மால் பார்க்க முடிகிறதா? காற்று எங்கும் இருக்கிறது. அதை நம் கண்ணால் காண முடிவதில்லை. ஆனாலும் அதன் ஸ்பரிசத்தினால் அதை நாம் உணர முடிகிறது. அப்படி ஏதாவது ஒரு வகையில் கடவுள் எங்கும் இருப்பதை உணர முடிகிறதா? "இல்லையே!

எல்லாவற்றையும் உண்டாக்கிப் பாதுகாக்கும் பிரான் அவன். பிரான் என்ற சொல்லுக்கு உபகாரி என்று பொருள். அவனைவிடப் பெரிய உபகாரி யார் இருக்கிறார்கள்? வள்ளல்களுக்கெல்லாம் பெரிய வள்ளல் அவர். மாயூரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு வள்ளல் என்றே பெயர் உண்டு. அதை வடமொழியில் 'வதான்யேசுவரர்' என்பார் கள். அந்த வள்ளலை, பிரானை, நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? நமக்கு வேற்றுாரிலிருந்து ஒருவர் நம்மிடம் உள்ள அன்பினால் நமக்கு வேண்டிய நெல்லை அனுப்பி வைக்கிறார். சில சமயங்களில் பணங்கூட அனுப்புகிறார். அந்த உபகாரியினால் நலம் பெறும் நாம், அவரைக் காண