பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

305

“அவன், அந்தப் பிரான், இங்கே இருக்கிறான்.!"

அதைக் கேட்டு அன்பர்களுக்கு வியப்பாக இருக்கிறது. "இங்கேயா? இங்கே என்றால் மிகவும் அருகில் என்றல்லவா பொருள் கொள்ளும்படி இருக்கிறது? சமீபத்தில் இருப்பதாக அல்லவா சொல்கிறார்? அந்த, இங்கே என்பது எந்த இடம்? என்று அவர்கள் எண்ணம் ஒடுகிறது. அவர்களுடைய ஆவல் கரையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளத்தைப் போலப் பெருகுகிறது.

“இங்கேயா? எங்கே? இங்கே என்று எதைக் சுட்டுகிறீர்கள்?”

அம்மையார் புன்னகை பூத்துக் கொண்டே, இங்கேதான்” என்று தம் இதயத்தின்மேல் கைவைத்துச் சுடடிக் காட்டுகிறார். கேட்ட அன்பர்கள் ஒன்றும் தெரியாமல் விழிக்கிறார்கள்.

"ஆம், இங்கேதான் ஒன்றுக்கும் பற்றாத என் சிந்தையில் இருக்கிறான்; என்னைப் போன்றவர்கள் சிந்தையிலும் இருக்கிறான். வேறு எவ்வளவோ இடங்களிலும் இருக்கிறான். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவன் இந்த இடத்திலேயே, இங்கேயே, என்னைப் போன்றவர்களின் சிந்தையிலும் இருக்கிறான். இங்கே அவனைக் காணலாம்; நோக்கலாம்; பேரருளைப் பெறலாம்.”

என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான்.

அம்மையாருடைய நல்லுரையைக் கேட்ட அவர்களுக்குத் தெளிவு பிறக்கிறது. வெளியிலே தேடப் புறப்பட்டால் போய்க் கொணடேதான் இருக்க வேண்டும். உண்முகமாக உங்கள் நோக்கத்தைத் திருப்புங்கள். அங்கே காணலாம் என்று அம்மையார் குறிப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.

நா.—20.