பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

அப்படி உண்முக நோக்கம் எளிதிற் கிடைக்குமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாகிறது. அதை அம்மையார் ஊகித்துக் கொள்கிறார்.

காண வேண்டும் என்ற ஏக்கமும் இடைவிடாத முயற்சியும் பேரன்பும் உடையவர்களாக இருப்பவர்கள் மற்ற இடங்களில் தேடவேண்டாம். உள்ளே தேடினால் எளிதாகக் காணலாம். அப்படிக் காண்பாருக்கு அவன் காட்சி எளிதாகக் கிடைக்கும்” என்று விளக்குகிறார் அம்மையார்.

காண்பார்க்கு எளிது.

உள்ளே நோக்கும் காட்சி முறுகிய அன்பர்களுக்கு எளிது என்கிறார். அப்பர் சுவாமிகளும், ‘வெளியிலே தேடிய திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிய ஒண்ணாத இறைவனை நான் உள்ளே தேடிக் கண்டு கொண்டேன்.’ என்றல்லவா சொல்கிறார்?

"திருமாலொடு நான்முகனும் தேடியும் தேடோணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்.

ஆகவே, பெரு நெறியைப் பேணிப் பிரானுடைய பேரருளை வேண்டி நிற்பவர்கள், புறநோக்கை விட்டு அக நோக்கை மேற்கொண்டு, புறப்பயணத்தை விட்டு அகப் பயணத்தை மேற்கொண்டால், அவனைக் காணும் காட்சி எளிதாகும் என்று அம்மையார் உபதேசம் செய்கிறார். அது ஒரு பாட்டு வடிவாக மலர்கிறது.

பிரான் அவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரான்அவன்றன் பேரருளே வேண்டிப்—பிரான் அவனை
எங்குற்றான் என்பீர்கள்; என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான்; காண்பார்க்கு எளிது.

பரம உபகாரியாகிய ஆண்டவனை நோக்கி ஒழுகும் பெரு நெறியைக் கடைப்பிடித்து, பிரனாகிய அவ்னுடைய பேரருளைப் பெறுவதை லட்சியமாக அதனை விரும்பி, அந்தப்