பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

309

உலகியல் இன்பங்களைப் பெறுவதற்கு எத்தனை முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது? எத்தனை காலம் செலவிட வேண்டியிருக்கிறது? அப்படிச் செய்தாலாவது நினைத்தபடி இன்பம் கிடைககிர்தா? இல்லையே! ஒது கவளம் சோறு பெறுவதற்கு எவ்வளவு உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. வீட்டுக்கு ஒரு கலம் நெல் வரவேண்டுமானால், வயலில் விதைப்பது முதல் அறுவடை வரையில் பல பேர் சேர்ந்து பலபல வகையில் வேலை செய்யவேண்டும். இப்படியே உலகியல் இன்பத்துக்காக மனிதர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிக்கொண்டு எத்தனையோ பாடுபடுகிறார்கள்.

நாம் உடை உடுத்துகிறோம், நாமே ஆடையை எடுத்து நம் கைகளால் அணித்து கொள்கிறோம். இது மிகவும் எளிய செயலாகத் தோன்றுகிறது. ஆனல் அந்த ஆடை நமக்கு எப்படிக் கிடைத்தது? பருத்திச் செடியை வளர்ப்பது முதல் ஜவுளிக் கடையில் போய் அதை வாங்குகிற வரைக்கும் அந்த ஆடை எத்தனை பேரை வேலை வாங்கியிருக்கிறது! ஆடை நம்முடைய உடம்பிலிருந்து உண்டாவதில்லையே! கையை நீட்டினால் இது வந்து விழுந்துவிடாதே!

இறைவன் திருவருளைப் பெறுவதற்கு என்ன என்ன வேண்டும்? எத்தனை பேருடைய உதவி வேண்டும்? ஒன்றுமே வேண்டாம், யாருடைய உதவியும் வேண்டியதில்லை. வெளியிலிருந்து எந்தப் பண்டத்தையும் வாங்கி வர வேண்டாம். இறைவனை எப்போதும் நினைத்தபடியே வாழ்ந்தால், அவன் திருவருளைப் பெற்று விடலாம்.

இறைவனைச் சிந்தையில் நினைந்து வாழ்வதற்குப் புதியதாக மனத்தைச் சம்பாதிக்க வேண்டாம். நம்மிடமே அது இருக்கிறது. அதற்குப் புதியதாக ஆடை அணிகளை அணிய வேண்டாம். நினைப்பது என்ற காரியம் மிகமிக எளிது. உடம்பினால் ஏதேனும் வேலை செய்ய வேண்டுமானால் இடம் விட்டு இடம் போகவேண்டும்; எழ வேண்டும்; நடக்க வேண்டும்; நிமிர வேண்டும்; குனிய வேண்டும்; கை கால்களை அசைக்க