பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

311

அவனை நினைந்து, சிந்தையில் எப்போதும் அவன் திருக்கோலத்தை வைத்து, வாழும் திறம் எளிது. அதை மக்கள் தெரிந்து கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கிறார்களே! இவ்வாறு உலகத்தவரை எண்ணி இரங்குகிறார் காரைக்காலம்மையார். அவர்களைப் பார்த்தே சொல்லத் தொடங்குகிறார்.

"இந்தக் காரியம் மிக எளியதாயிற்றே! இதை நீங்கள் செய்ய எந்தப் பெரு முயற்சியும் மேற்கொள்ளத் தேவை இல்லையே! என்று தொடங்குகிறார்.

எடுத்த எடுப்பிலே, இது எளிய காரியம் அல்லவா? என்று அவர் கேட்கும்போது நமக்கு அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மூள்கிறது.

எளியது இது அன்றே?

அடுத்தபடி நம்மைப் பார்த்து இரங்குகிறார் அம்மையார். எந்தச் செல்வத்தைப் பெற வேண்டுமோ அதைப் பெறாமல் உலகியற் பொருள்களைப் பெற்றுக்கொண்டு,"நாம் இது பெற்றோம் அது பெற்றோம்” என்று பெருமைப்பட்டுக் கொள்கிறீர்களே! அந்தச் செல்வமெல்லாம் நிலைத்து நிற்குமா? இறைவனுடைய அருட் செல்வமல்லவா நிலையான செல்வம்? அதைப் பெறாதவர்கள் எவ்வளவு உலகியற் செல்வங்களை உடையவர்களாக இருந்தாலும் ஏழைகளே அல்லவா? அந்த அருட் செல்வத்தைப் பெறாமல் உள்ள ஏழைகளே! என்கிறார்.

ஏழைகாள்!

உலகியற் பொருளைப் பற்றிக்கொண்டு அதை யாருக்கும் சிறிதளவும் கொடுக்காமல், இதுவே நமக்கு இன்பந்தருவது என்று எண்ணியிருக்கிறீர்களே! பிறருக்கு அளிக்காமல் பற்றிக் கொண்டவர்களே! என்று அடுத்தபடி சொல்கிறார்.

யாதும் அளியீர்!

மனிதன் அறிவிற் சிறந்தவன். பகுத்துப் பார்க்கும் ஆறாவது அறிவு பெற்றவன். அந்த அறிவை விளக்கப்படுத்தி