பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

மெய்ஞ்ஞானத்தைப் பெற வேண்டும். இறைவனை அறியும் அறிவே மெய்யறிவு. அந்தத் துறையில் ஈடுபடுபவன் தான் மெய்யறிவு வாய்ந்தவன். உங்களிடம் அந்த அறிவு இல்லையே!

அறிவிலீர்!

‘உங்களைப் பார்த்தால் எனக்கு இரக்கம் உண்டாகிறது. ஐயோ பாவம் என்று இருக்கிறது.’

ஆவா|

‘நீங்கள் உண்மையான செல்வர்களாகி, மெய்வறிவுடையவர்களாக வாழ வேண்டுமா? நான் வழி சொல்கிறேன். மிகவும் எளிய வழி. இறைவனைச் சிந்தையுள்ளே நினைந்து வாழுங்கள். அவனை நினைக்க முடியாதென்று எண்ணாதீர்கள். அவன் அழகிய திருக்கோலத்தோடு விளங்குகிறான். எங்கே போய்த் தங்கலாம் என்று உழன்றுகொண்டே இருக்கிறான்.’

'அவன் எப்படி இருப்பான்? அவன் கோலத்தை எவ்வாறு நினைப்பது?' என்று நாம் கேட்கிறோம்.

அம்மையார் சொல்கிறார்; 'அவன் திருக்கழுத்து நீலமணி போல ஒளிவிட்டிருக்கும். அவன் நமக்கெல்லாம் தகப்பன். அவனைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு கொடியவர்களானாலும் நல்லவர்கள் ஆகிவிடுவார்கள். அவன் அணிந்திருக்கும் பாம்பே இதைத் தெரிவிக்கும். ஒளிகொள் மிடற்றுடன் அராவைப் பூண்டு கொண்டு எந்தை உழன்றுகொண்டிருக்கிறான். தம்மை வரவேற்கச் சிந்தையென்னும் உள்வாயிலைத் திறந்துகொண்டு யார் இருக்கிறார் என்று தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.'

ஒளிகொள் மிடற்று
எந்தை அராப்பூண்டு உழலும் எம்மானை.