பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



313

அத்தகைய பெருமானை உள்ளத்தினுள்ளே அந்தரங்க சுத்தியோடு, அன்போடு வைத்து, அவனுடைய ஆதனமாகச் சிந்தையை ஆக்கி. அத்தகைய சிந்தையை உடையவரார் வாழும் திறமை மிக அரிது என்று எண்ணவேண்டாம். அது மிக எளிது. வெறும் நினைப்பளவிலே சித்திப்பது."

உள் நினைந்த
சிந்தையராய் வாழும் திறம்

விமானத்தில் ஏறாமல் டிக்கட் வாங்காமல் நினைத்த மாத்திரத்தில் அமெரிக்காவில் போய் நிற்க முடிகிறதே; எண்ணத்தில்தான் எவ்வளவு எளிது? அப்படி எண்ணினால் அமெரிக்காவை அடைந்த சுகம் வராது. எம்பெருமானை நினைப்பது அப்படி அன்று. அவனை நினைப்பதுவே செய்ய வேண்டிய காரியம். அதனால் அருட் செல்வராகலாம்: மெய்ஞ்ஞானி ஆகலாம். வெறும் நினைப்பே இதைச் செய்யுமானால் அது மிக மிக எளிதுதானே? இதைத்தான் அம்மையார் சொல்கிறார்.

எளியது இதுஅன்றே? ஏடழைகாள், யாதும்
அளியீர், அறிவிலீர் ஆவா! ஒளிகொள் மிடற்று
எந்தை, அராப் பூண்டு உழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழும் திறம்

[அருட் செல்வம் பெறாத வறியவர்களே, சிறிதும் பிறருக்குக் கொடுக்காதவர்களே, அறிவில்லாதவர்களே, அந்தோ! மணியின் ஒளியைக் கொண்ட திருக்கழுத்தையுடைய எந்தையும், அராவை அணிகலனாகப் பூண்டு அன்பர்களைத் தேடித் திரியும் எம்மானுமாகிய பரமேசுவரனை அந்தரங்கத்திலே நினைக்கும் உள்ளம் உடையவர்களாக வாழும் திறமையாகிய இது எளிது அல்லவா?

‘திறம் இது எளிது அன்றே’ என்று கூட்டிப்பொருள் கொள்க. அன்றே-அல்லவா; ஏ: வினா. பின்னாலே அறிவிலிர்