பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

என்று வருதலின், ஏழைகாள் என்பதற்கு அருட்செல்வத்தைப் பெறாத வறியவர்களே என்று பொருள் கொள்ளவேண்டும். யாதும்-சிறிதும் அளியீர் என்பதற்கு, இரங்கத் தக்கவர்களே என்று பொருள்கொள்ளின், யாதும் என்பது எதனோடும் சேராது நிற்கும். ஆவா-அந்தோ; இரக்கக் குறிப்பு. ஒளி-நீலமணியின் நிறம், ஆலகாலத்தைக் கொண்டதாதலின் நீல நிறமுடையதாயிற்து. அம்மையார் நீலகண்டத்தைப் பலகாலும் நினைப்பவர். உழலும்-திரியும்: சஞ்சாரம் செய்யும். அடியார் யாரேனும் உள்ளாரா என்று எப்போதும் தேடித் திரிவது இறைவன் கருணைச் செயல்.]

இறைவனை அந்தரங்க சுத்தியோடு தியானம் செய்து வாழ்ந்தால் அவன் திருவருளைப் பெறவாம் என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் 46-ஆவது பாட்டு இது.